பக்கம்:வாழும் கவிஞர்கள்.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதிப்புரை எங்கள் தந்தையார் செந்தமிழ்ச்செல்வர் இராம. பெரி. பெரியகருப்பன் செட்டியார் அவர்கள், எங்கள் தாயார் பெயரில் தொடங்கிய மெய்யம்மை பதிப்பகத்தின் தமிழ்த் தொண்டு தொடரும் வகையில் "வாழும் கவிஞர்கள் ” என்ற இந்நூல் பதினோராவது வெளியீடாக வருகிறது. தந்தையாருக்குப் பிறகு சற்று தேக்கமுற்றிருந்த பதிப்பகச் செயல்பாட்டிற்குப் புத்துயிர்ப்பளிக்கும் வகையில் சமகாலக் கவிஞர்களைக் கண்டுகாட்டும் இப்பதினோராம்வெளியீட்டு நூலைத் தமிழ்கூறு நல்லுலகிற்கு அளிக்கின்றோம். எங்கள் சேந்தனியார் குடும்பத்தைச் சேர்ந்த நல்ல தமிழ்ப்பற்றாளர், கவிச்செம்மல் டாக்டர் ரெ. முத்துக்கணேசனார் அவர்கள் எங்கள் இராமசாமி தமிழ்க் கல்லூரியில் 1995ஆம் ஆண்டில் தம்பெயரில் தமிழ் அறக்கட்டளை ஒன்றை நிறுவினார்கள். ஆண்டுதோறும் ஒரு தமிழறிஞரின் சொற்பொழிவு நடைபெறவும் அதனை நூலாக்கம் செய்து கொள்ளவும் ஏற்பாடு செய்தார்கள்.1996 ஆம் ஆண்டு தொடங்கி மூன்று அறக்கட்டளைச் சொற்பொழிவுகள் நடைபெற்றன. நாடறிந்த நல்ல தமிழறிஞர் டாக்டர் ந. சுப்பு ரெட்டியார் அவர்கள்" திறனாய்வுநோக்கில் வாழும் கவிஞர்களின் கவிதைகள்” என்ற பொருளில் மரபுக்கவிதை, புதுக்கவிதை என்ற இரு தலைப்பில் 27. 2.98ல் எங்கள் கல்லூரியில் சொற்பொழிவு நிகழ்த்தினார்கள்.