பக்கம்:வாழும் கவிஞர்கள்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

47 கோதிலாக் காய்கனி பெற்று தறையுறு தருவே எனுமுண்மை பகரும் நலமமர் ஞானமார் இந்நூல் பொறைவடி வாய பிரபந்தம் முன்பு புரிதவப் பயனென உணர்ந்தேன். இவை இரண்டும் இந்நூலால் இராமராசன் அறிந்தவற்றைக் கூறுடவை கருணையே வடிவாம் எதிபதி ஞானக் களஞ்சிய தேசிகன் புல்லர் மருனெறி போக்கும் வரமுனி இவர்கள் வளர்த்திட்ட நல்லறம் வளரத் தெருனிறை கின்ற வைணவச் 茄 செல்வம் چستر -: திருவுருக் கொண்டதை அறிந்தேன் இருளினைத் தகர்த்தேன் என்றினி இசைப்பர் இப்பெரு நூலுனர் புலவர். பரத்துவம் முதலா ஐவகை நிலையைப் பாங்குறத் தெளிந்தனம் உயிரின் தரத்தினை உணர்த்தும் பிரபத்தி நெறியைத் தகவுறத் தெரிந்தனம் தெய்வ வரத்தனை வழங்கும் மந்திர நெறியின் மாண்பினை உணர்ந்தனம் அதனால் சிரத்தினில் ஏற்கத் தக்கதென் றுரைப்பர் திருந்துமிந் நூலுனர் புலவர். இவையிரண்டும் புலவர்கள் இந்நூலைப் பற்றிக் கூறுவனவாக அமைந்தன. தத்துவம் ஒருபால் ஒளிவிடும் ஞானச் சரோருகம் ஒருபக்கம் மலரும் வித்தகப் பத்திஒரு புலத்திலங்கும் வேதமோ யாங்கணும் துலங்கும் சத்தியம் ஞானக் கோவினை ஏந்தித் தந்ததே இந்நூல் என்று பத்தியின் மிக்க சான்றவர் உணர்வர் படைத்தவர் வாழிபல்லுழி,