பக்கம்:வாழும் கவிஞர்கள்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3. நாரா. நாச்சியப்பன் દ્વષ્ટ ميم இவர் செட்டிநாட்டுக் கவிஞர் குழாமைச் சேர்ந்தவர். பாவேந்தர் பரம்பரைக் கவிஞர்களில் ஒருவர். சிவகங்கை மாவட்டம் திருப்புத்தூர் வட்டம் குன்றக்குடிக்கு அடுத்த ஆத்தங்குடி முத்துப் பட்டினத்தில் பிறந்தவர் 1927). கோனா பட்டில் உயர்நிலைப் பள்ளிப் படிப்பை முடித்துக் கொண்டு 1946 -47 திருச்சி தேசியக் கல்லூரியில் இடைநிலை வகுப்புவரை படித்தவர். கல்லூரி வாழ்விலேயே கவிதைகள் எழுதத் தொடங்கி இன்றுவரை எழுதிக் கொண்டிருப்பவர். சில ஆண்டுகட்கு முன்னர் திருச்சியில் நடைபெற்ற பாரதிதாசன் நூற்றாண்டு விழாவில் பாரதிதாசன் விருது, பத்தாயிரம் பொற்காசுகள் வழங்கிச் சிறப்பிக்கப் பெற்றவர். சுமார் முப்பத்தைந்து ஆண்டுகளாக எழுதிய மரபுக் கவிதைகளைத் தொகுத்து முதல் 1980 இரண்டாவது 1981 தொகுதிகளால் வெளியிட்டவர்.

பிறப்பிடம்: கவிஞர் செட்டி நாட்டைச் சேர்ந்தவர். நகரத்தா மரபினர் என்பதை கட்டிவைத்த மனைவியையே விட்டில் வைத்துக் கடல்கடந்து பொருள்திரட்டச் செல்லு கின்ற கெட்டவொரு பழக்கத்தால் ஆண்க ளெல்லாம் கெட்டுவிட்டார் பெண்களுக்கும் இன்பம் இல்லை வட்டிக்கு வட்டியெனப் பொருள்டெ ருக்கி வாழ்ந்தவர்கள் சொத்தெல்லாம் வைப்புக் காச்சு தொட்டுவிட்ட மனைவிதனைத் தனியில் வைத்துத் தொலைபோகும் பழக்கத்தை நிறுத்த வேண்டும். என்னும் கவிதை பளிச்சிட்டுக் காட்டும். இப்பழக்கம் பெரும்பாலும் இப்போதில்லை. செட்டி மக்கள் செட்டாகவும் இருப்பர் கணக்காகவும் இருப்பர். பிறர் இப்பண்பை மேற்கொள்ள வேண்டியது. பதினாறாண்டுக் காரைக்குடி வாழ்வில் இப்பண்பு என்னிடம் படிந்தது. சில கடிதங்கள் சுப்பு செட்டியார் என்றே எனக்கு வருவதுண்டு. வரவு செலவுக் கணக்கை அற்புதமாக எழுதுவார்கள். நகரத்தார் வரலாறு தமிழர் நாட்டில் நாகரிக வரலாற்றின் பகுதி யாகும்.