பக்கம்:வாழும் கவிஞர்கள்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெய்திருக்கும் மழைநீரில் ஓடி வந்து பெருமகிழ்வால் சிரித்தபடி பேசு கின்றாள் அழகு மங்கை இப்பூவுலகில் உள்ள பொருள்களிலெல்ல தென்படுகின்றாளாம். விண்வெளியில் ஒளிர்கின்ற நட்சத்திரங்களில் காணப்படுகின்றாளாம். இங்ஙனம் தோன்றியவள் செய்ய திருப்பாக்களில் நடம்புரிந்து சிறு குழந்தை புன்னகைப்பில் மின்னலாகி பெய்திருக்கும் மழைநீரில் ஓடிவந்து நகைத்தபடி பேசுகின்றாளாம். அற்புதக் காட்சி இது. காலையிலே கடல்மீது தோன்று கின்ற கதிரவனின் செவ்வொளியில் மிதந்து வந்தான் சாலையிலே நடுப்பகலில் மரத்தின் கீழே சரிந்திருக்கும் நீழலிலே ஒட்டிக் கொண்டாள் மாலையிலே வானத்தின் செங்க ளத்தில் வழிந்திருந்த குருதியிலே மின்னித் தோன்றிச் சோலையிலே நிலவுவந்து பாலை பள்ளித் தெளித்தவுடன் சிரித்துவிட்டாள் அழகு மங்கை இந்த அழகு மங்கை காலையில் உதிக்கும் கதிரவனின் செவ்வொளியில் மிதந்து வருகின்றாள். சாலையில், நடுப்பகலில், மரத்தின் நிழலில் ஒட்டிக் கொள்ளுகிறாள். மாலையில் செக்கர் வானில் மின்னித் தோன்றுகிறாள். சோலையில் நிலவாகத் தோன்றிப் பாலைஅள்ளித் தெளித்துச் சிரிக்கின்றாள் முல்லைப்பல் காட்டி. எல்லாப் பாடல்களும் அற்புதமானவை. இவை பாவேந்தரின் அழகின் சிரிப்பில் முதல் மூன்று பாடல்களின் பிரதிபலிப்பாக அமைந்திருக்கின்றன. மழையைப் பற்றிய வருணனை மகிழ்ச்சியை நல்குகின்றது. வையத்திற் கமுத மாக வந்திடும் மழையைக் கண்டு செய்யதம் உள்ள மாரச் செடிகளும் கொடிகள் மற்றும் வெய்யவன் கொடுமை மாற்ற விளங்கிடும் மழைகள் தாமும் கையெனத் தளிர்கள் நீட்டிக் களித்திடும் சீர்த்தி என்னே. நீரின்று உலகம் அமையாது அன்றோ?