பக்கம்:வாழும் கவிஞர்கள்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

بهني. $: மண்ணிலே புதைந்தி ருத்தோம் மற்றுகின் வரவு கண்டோம் எண்ணின் மகிழ்வு டைத்தோம் இன்னும்நீ வாழ்க வென்று வெண்ணிலா வரவு கண்டு விரியுமோர் அல்லி போன்று: தண்ணில் தவளை யெல்லாம் தாளப்பாட் டிசைத்த தம்மா! இப் பாடலில் மழையின் வரவால் தவளைகளின் கும்மாளம் காட்டப் િ பாவேந்தரின் அழகின் சிரிப்பில் வருவது போல் ஒரு ன் செயல் வருமாறு. மழைசொட்ட நனைந்து போன மதிகெட்ட ஒருகு ரங்கு குளத்துநீர் மொண்டு யாரோ கொட்டி னாரெனதி னைத்தே உளங்கொண்ட சினத்தை யெல்லாம் உணர்ந்திட நீரை மொண்டு மளமளவென் றிறைத்த காட்சி மதிக்கொரு நகைவி ருந்தாம். அடுத்து வருவது மகளிர் விளியாக வருவது. வானைச்சேர் மேக மெல்லாம் வலிமிகும் யானைக் கூட்டம் யானைகள் ஒன்றை யொன்று அழிந்தன மோதி மோதித் தேனைப்போல் இனிய சொல்லாய்! திகழ்ந்தன தந்த மாக மீனைப்போல் ஒளிரும் உன்கண் கவர்ந்திடும் மின்னல் கண்டால், மேகங்கள் யானைகளாகவும், மின்னல் அவற்றின் தந்தமாகவும் காட்டப் பெறும் கட்புலப்படிமம் (visualimage) அற்புதம், கற்பனை நயம்: கவிதைக்கு மிகவும் இன்றியமையாத பண்பு கற்பனையாகும். கவிஞரின் கற்பனையாற்றலைப் பல பாடல்களில் கண்டு மகிழலாம். பகலவனையும், அம்புலியையும் பாடாத கவிஞர்களே