பக்கம்:வாழும் கவிஞர்கள்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாரா நூச்சியப்பன் 59 கவர்ந்த நெஞ்சைக் கவர்ந்தவர்கள்: தலைவர்களைப் பாடிப் போற் ம் நெறி, த் தொகையிலும் நம்பியாண்டார் சேக்கிழார் பெருமான் பெரிய ாற்றிப் பாராட்டியுள்ளதை நாம்

  • :
  • -
த்த நல்லவர்களையும், பாவேந்தர் ாளனர்.அதுபோல கவிஞர் நாராநா

மறைமலையடிகளை பிட்டுப் பாடியதை மேலே காட்டினேன். அறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி, நாவலர் நெடுஞ்செழியன். தந்தை பெரியார் சொல்லின் செல்வர் சம்பத்து, தம்பிக் கோட்டைக் கணபதி போன்றவர்களையும் பாடியுள்ளார். கோவேந்தர் பாண்டியதைக் கொண்ட திருவுருவம் நாவேந்தர் அண்ணாவின் நம்பிக்கைப் பேசிமயம் பாவேந்தர் பாராட்டும் பைந்தமிழின் பொற்பேழை மூவேந்தர் பண்பும் முதிர்ந்த நெடுஞ்செழியன் எந்தை பெரியார் எழிற்கருத்தைக் கேட்போரின் சிந்தைப் பதிவைத் தெருத்தோறும் பாய்ச்சிவரும் மைந்தன் இளந்தாடி என்னும் மணிப்பெயரன் நிந்தைக் கிளையா நிமிர்தோள் நெடுஞ்செழியன் என்பன நெடுஞ்செழியனைப்பற்றியன. மொழிப்போரில் வெற்றி பெற்று முடிவிலே நாட்டுப் போரும் விழிப்போடு நடத்து தற்கு வேண்டிய தகுதி பெற்றாய் செழிப்பான தமிழர் நாட்டுச் செல்வமே சம்பத் தென்னும் எழிற்பேராய் வாழி வாழி இளஞ்சிங்கமனையாய் வாழி! என்ற பாடல் சம்பத்தை வாழ்த்துவதாக அமைந்தது. கற்றவரைப் பின்பற்றும் கலைஞன், நல்ல கவிஞர்களைப் போற்றுகின்ற கலைஞன், தன்னைப் பெற்றவரைத் தவம்பெற்றார் ஆக்கி விட்ட பெருமைந்தன் தமிழன்னை பெற்ற செல்வன்,