பக்கம்:வாழும் கவிஞர்கள்.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4. திருமதி செளந்தரா கைலாசம் இவர் சேலம் மாவட்டத்தில் அழகுநல் நதியாம் அமராவதிக் கரையில் அமைந்துள்ள செட்டிப் பாளையம் என்ற சிற்றுரில் (1927) பிறந்தார். பிறந்த குடும்பம் செல்வச் செழிப்பும் பக்திப் பெருக்கும் உடையது. திருச்செங்கோடு வட்டத்தில் புதுப்பாளையம் எனும் சிற்றுரில் இராஜாஜி-காந்தி ஆசிரமம் நிறுவியபோது அதற்கு வேண்டியநிலத்தை அளித்தது இவர்தம் அன்னைவழிப் பாட்டனார் இரத்தின சபாபதிக் கவுண்டர். இவர் நாட்டுப் பற்றாளர். தந்தையார் சுந்தரக் கவுண்டர்தான் செந்தமிழ் ஆர்வத்தை இவர்தம் இதயத்தில் வளர்த்தவர்.ஒன்பதாவது வகுப்பில் பயின்றபோது பள்ளிப் படிப்பு நின்றது. திருமணம் கூடி இல்லத்தரசியானார்கள். 1941 இல் இவர்தம் திருமணத்தை நடத்தி வைத்தவர் டாக்டர் சுப்புராயன் அவர்கள்.அப்போது பெண்ணிண் வயது 14. இவர்தம் ஒன்றுவிட்ட தம்பி சேலம் மாவட்டம் நாமக்கல் வட்டம் பாலப்பட்டி பெருநிலக் கிழவர் சடையப்பக் கவுண்டரின் இரண்டாவது மகன் பா.ச.கைலாசம் அவர்கள் இவர்தம் கணவராக வாய்த்தார்கள்.திரு கைலாசம் அவர்கள் பெரும்புகழ் பெற்ற திருஎதிராஜர் என்ற புகழ் பெற்ற வழக்கறிஞரிடம் பயிற்சி பெற்றுச்சிறந்த வழக்கறிஞராக மலர்ந்து சென்னை உயர்நீதி மன்ற நீதிபதி, தலைமை நீதிபதி, புது தில்லி உச்ச நீதி மன்ற நீதிபதி, என்ற பல பதவிகளில் உயர்ந்தார்கள். அம்மையாரின் இல்லற வாழ்வில் கணவர் அளித்த சுதந்திரத்தின் காரணமாகப் பல தமிழறிஞர்கள் தொடர்பினால் தமிழறிவு வளர்ந்தது. கவிதை இயற்றும் ஆற்றலும் வளர்ந்தது. பல ஆயிரக்கணக்கான கூட்டங்கள் கவியரங்கங்கள், கருத்தரங்குகள் ஆகியவற்றில் கலந்து கொள்ளும் வாய்ப்புகள் கிட்டின. நூற்றுக்கணக்கான திருத்தலப் பயணங்களை மேற்கொண்டு இறை வழிபாட்டில் தோய்ந்தார். சென்னை வடபழநி முருகன் இவரது விருப்பமான தெய்வம். அவனருளால் கவிதை இயற்றும் ஆற்றல் பெருகியது. இதுகாறும் அம்மையார் இயற்றிய பாடல்கள் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டவை ஆகும். இவர்தம் பாடல்களின் முதல் தொகுப்பு தெய்வப்பாடல்கள். தேசப் பாடல்கள், சமூகப் பாடல்கள், சான்றோர் பாடல்கள், பல்சுவைப் பாடல்கள் என்று ஐந்து வகையாகப்பாகு