பக்கம்:வாழும் கவிஞர்கள்.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66 வாழும் கவிஞர்கள் படுத்தப்பட்டுள்ளன. இது வெளிவர உதவி புரிந்தவர் குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா அவர்கள். இவர்தம் கவிதைகளில் மூன்றில் ஒரு பகுதி தெய்வப் பாடல்களாக அமைந்திருப்பது இவர்தம் இடையறாத இறையன்பிற்கும் இறைவழிபாட்டிற்கும் சான்றாக அமைகின்றது. முதல் தொகுதி இவர்தம் அன்புக் கணவர் நீதியரசர் அமரர். பா.ச.கைலாசம் அவர்கட்கு அன்புப் படையலாக்கப் பெற்றுளது. அவற்றுள் சில பாடல்கள் வருமாறு. வீட்டிற்குள் நிற்காமல் வெளியில் சென்று விளையாடும் பருவத்தில் மேலாம் அன்புக் கூட்டிற்குள் எனைவளர்த்துத் தாலி கட்டிக் குடும்பத்துத் தலைவியெனக் கூறி விட்டாய் ஏட்டிற்குள் சுரைக்காயால் பயன்யா தென்றே எனையுலகம் அறிந்தவளாய்ச் செய்ய எண்ணி நாட்டிற்குள் ஆங்காங்கே நடப்ப வற்றை நயமாக எடுத்தெடுத்து நாளும் சொன்னாய் தந்தையுமாய் அன்னையுமாய்ப் பாடம் சொல்லித் தந்திடும்நல் ஆசானாய் அன்பி னாலே எந்தஒரு பொழுதினிலும் என்னைக் காக்கும் ஈடறியா ஈசனுமாய் வேறு வேறாய் வந்தனைநீ கணவனென வழங்கும் அந்த வார்த்தைக்குள் அடங்காத வண்ணம் நின்றாய் சிந்தனைநீ மொழியும்நீ செயலும் நீயே சிரிக்கின்ற என்சிரிப்பில் உயிரும் நீயே உன்னரிய குணத்தாலே உயர்வி னாலே ஒளியுடைய கலைநுகரும் உணர்ச்சி யாலே என்னுள்ளே தானிருந்த ஆற்றல் தன்னை எளிதாக நீயுணர்ந்தாய் எனக்கும் சொன்னாய் பொன்னுள்ளே உள்ளசுடர் பொலிய வைத்துப் பூரித்தாய் வாழ்வித்தாய் புகழில் வைத்தாய் தன்னுள்ளே தானெனவே உட்கா ராமல் தமிழாலே எங்கெங்கோ தவழ வைத்தாய். திடமாகக் கடவுளினை நம்பி விட்டால் சேதாரம் ஒருநாளும் இல்லை யென்று