பக்கம்:வாழும் கவிஞர்கள்.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செளந்தரா கைலாசம் 67 வடபழநிக் கோயிலுக்குச் செவ்வாய் தோறும் வழக்கமாய் நான்செல்ல நினைத்த காலை சுடர்கின்ற எண்ணத்தைத் துண்டி விட்டுத் துயவனைத் தெரிசிக்கத் துணையாய் நின்றாய் முடமாக மூலையிலே முடங்கா வண்ணம் முன்னேறக் கைகோத்து முன்ந டந்தாய் பேருலகில் நன்னிதி சிறிது கூடப் பிறழாமல் இறைவனவன் துணையைக் கொண்டு சீருடைய பணிசெய்த உன்னை என்றன் சிறப்புடைய துணையாகப் பெற்றேன் மிக்க ஆர்வமுடன் கவிமலர்கள் தொடுத்தேன் நீயோ அழகென்று பாராட்டி ஊக்கு வித்தாய் பேருயரும் உன்பதத்தில் அவற்றை வைத்துப் பெருமையுடன் படைக்கின்றேன் ஏற்றுக் கொள்வாய் இந்த நூல் தயாரானதும் முதற்படியை அவரிடம் தந்து ஆசிபெற விழைந்தனர்.பதிப்பாசிரியர்கள். அந்தோ நூல் தயாராவதற்கு முன்பே அவர் பொன்னுலகை அடைந்து விட்டார் புகழுடம்பை இங்கு விட்டு. இனி அம்மையாரின் கவிதைகளில் ஆழங்கால்பட முயல்கின்றேன். இவர் தம் கவிதைகள் தெய்விகம். தேசம், சமூகம், சான்றோர், பல்சுவை என்ற பிரிவுகளில் வெளியிடப்பட்டுள்ளன (1987), இவற்றுள் தெய்வங்களைப் பற்றிய கவிதைகள் மூன்றில் ஒரு பகுதியாக அடங்கும் என்பதால் அம்மையார் இறைப்பற்று மிக்கவர் என்பதாக அறியக் கிடக்கிறது. கணநாதரைப் பற்றி 24 கவிதைகள் உள்ளன. இவர் ஒருவரே ஆயுதம் தாங்காத கடவுள் பிறருக்குவரும் தீங்குகளை விக்கினங்களை சங்கல்பத்தாலே நீக்கி விடுகின்றார், எங்கும் தெய்வம் உண்டு என்பதற்கு எடுத்துக் காட்டை மெய்ப்பிப்பது போல இவர் காட்சி தருகின்றார். என்பதை தினந்தோறும் சரியாகத் திறந்து மூடும் திருக்கோயில் பலவுண்டு நமது நாட்டில் கனமேறு அடியார்க்கே தெய்வம் அங்கு காட்சிதரும் மிகஅருகில் கணக்குப் பார்த்து, புனலூறும் கண்ணார்க்குப் புணையாம் தெய்வம் போவார்க்கும் வருவார்க்கும் பொதுவாம் தெய்வம்