பக்கம்:வாழும் கவிஞர்கள்.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68 tாழும் கவிஞர்கள் மனந்தோறும் குடியேறும் மக்கள் தெய்வம் வழிப்பிள்ளை யார் என்றால் மறுப்பார் யாரே? என்ற பாடல் மெய்ப்பிக்கின்றது. வாய்த்துள்ள முகம்போலும் இலையைக் கொண்டே மரத்தடியான் குளக்கரையான் மும்ம லத்தைத் தீய்த்துதவும் திருவிழியான் பெற்றோர் தம்மைத் தெய்வமெனச் சுற்றியசீர் அடியான், துன்பம் பேர்த்தருள ஒங்குமொரு தும்பிக் கையான் பிறவாத நன்னிலையில் உயிரை ஏற்றிக் காத்தருளும் கணநாதர் கழல்கள் போற்றிக் காலழுந்திக் கிடப்போமா மாயச் சேற்றில். இப்பாடலில் பெற்றோர் தம்மைத் தெய்வமெனச் சுற்றியசீர் அடியான் என்பதில் அடங்கியுள்ள வரலாற்றை நாம் நன்கு அறிவோம். செட்டி நாட்டில் பிள்ளையார் வழிபாடு அதிகம். உசிவமயம் போட்டு எழுதும் பழக்கம் இங்குதான் அதிகமாகக் காணலாம்.'உ' என்பது பிள்ளையர் சுழி.தும்பிக்கையை நினைவுகூர்வது. துதியாகப் பாடியபின் ஒளவையாரைத் தூக்கி விட்ட கையல்லவா? காப்பிற்கும் அவனுக்கும் சொந்த முண்டா? யானைமுகக் காதிற்குச் சந்த முண்டோ? காப்பிற்கு வாவென்று தமிழ கத்துக் கவிஞரிலே பெரும்பாலோர் மறவா தென்றும் கூப்பிட்ட காரணத்தைக் கூற வாநான் கொம்பெடுத்து எழுதியவன் கொம்பன் என்றே ஆப்பிட்டு நின்கின்றார் ஆசிக் காக அத்தனையும் கணபதிகை ராசிக் காக. முருகனைப் பற்றியும் அதிகமான பாடல்கள் உள்ளன. வடபழநி ஆண்டியைச் செவ்வாய் தோறும் வழிபடுபவரல்லவா? தமது இல்லத்திற்கும் முருகனடி என்று திருநாமமிட்டு மகிழ்ச்சி பெற்றவர். கழலும் ஒளியும் முருகனடி-இன்பத் தமிழின் சுவையும் முருகனடி, மழையும் புயலும் முருகனடி - நீல மயிலின் அழகும் முருகனடி,