பக்கம்:வாழும் கவிஞர்கள்.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செளந்தரா கைலாசம் 69 இதனைத் தொடர்ந்து ஒன்பது கவிதைகள், அத்தனையும் கற்கண்டுக் கவிதைகள், ஞாயிற்றின் பின்னாலே திரியும் திங்கள் நடந்துவரும் திங்களுக்குப் பின்னே செவ்வாய் ஆயிற்று வடபழநிக் கோயி லில்தான் அடியேன்நான் கண்விழிப்பேன் அலறி ஒடிப் போயிற்று உலகநினை வென்கின் றாற்போல் பொங்கிவரும் கண்ணில் எனையி ழப்பேன் வாயற்றுநின்றுவட பழநிக் குள்ளே வாழ்வெல்லாம் நானாக வளங்கொ ழிப்பேன் என்ற பாடல் அம்மையாரின் அநுபவத்தைக் காட்டுவது. அடுத்த தலைப்பில் வரும் கந்தனுனைக் கோயில்வந்து செவ்வாய் தோறும் காணுகின்றேன் உள்ளுரக் களிக்கின் றேன்யான் சொந்தமிகக் கொண்டாடும் என்னைத் துன்பம் சுடமுயன்று தோற்பதெலாம் பிறர்கண் ணுக்கு எந்தவிதம் படுமோவென் றொருகா லத்தில் எண்ணியவள் மாறுகிறேன் இன்றென் நெஞ்சம் வந்துநிலை கொள்ளும்உயர் வான சாதி வடபழநி முருகாபோய் வருவேன் போற்றி. என்ற பாடலும் அநுபவத்தை உரக்கப் பேசுகின்றது. பாரதியார் விநாயகர் நான்மணி மாலை யாத்ததுபோல் அம்மையாரும், திருமுருகன் நான்மணிமாலை பாடியுள்ளார். இதிலும் முருகனைப் பணிந்துருகும் பாங்கினைக் கண்டு மகிழ்வோம். இதில் கணபதி துதி காப்பாக அமைகின்றது. நின்னை நினைந்துருகும் நெஞ்சில் நிலைத்திடுவாய் என்ன இடர்வரினும் ஏற்றிடுவாய் - அன்புடைய உன் தம்பி ஆறுமுக உத்தமனின் சீர்பா. இன்றெனக்குக் காப்பாய் இரு. முருகனைப் பற்றி வரும் அகவற்பா ஒன்றில் வேற்படைக் கெதிரே வேதனை துகளாம் ஆறு முகத்தனை ஆளும் அரசினைக்