பக்கம்:வாழும் கவிஞர்கள்.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செளந்தரா கைலாசம் 73 அம்மையாரின் பக்தியும் ஈடுபாடும் இதில் ஒளிர்வதைக் காணலாம். அம்மையார் அவர்கள் பார்க்காத தலங்கள் இல்லை. திருத்தலப் பயணத்தில் அவர்கட்குக் கொள்ளை ஆசை. அப்பயணத்தின் காரணமாகத்தான் இத்தகைய பாடல்கள் எழுந்தன. 1964 செப்டம்பர்-அக்டோபர் மாதம் என்பதாக நினைவு. அடியேன் குடும்பம் அப்பொழுது காரைக்குடியில் இருந்தது. நான் திருப்பதியில் இருந்தேன். அப்போது நம்மாழ்வார் தத்துவம் பற்றி ஆய்ந்து கொண்டிருந்தேன். 108 வைணவ திவ்ய தேசங்களைச் சேவிக்கும் திட்டம் இருந்தது. அப்பொழுது என் இளையமகன் இராமகிருஷ்ணனுடன் நானும் சில வைணவத் தலங்களைச் சேவித்துக் கொண்டு, திருப்பரங்குன்றம் முருகனையும் சேவிக்க வந்தேன். தற்செயலாக அம்மையார் அவர்களைத் திருக்கோயில் வாசலில் சந்தித்தேன். முருகன் அருளால் ஒருவர்க்கொருவர் அறிமுகமானோம். அப்போது அம்மையார், கோவையிலிருந்து பெதுரனை ஆசிரியராகக் கொண்டு நடைபெற்று வந்த கால சக்கரம் பிறை இதழில், செந்தமிழ்த் தீனி என்ற கட்டுரை எழுதிய ரெட்டியார் நீங்கள்தானா? என்று கேட்டார்கள். அவ்வளவு நினைவு அவர்கட்கு கட்டுரை எழுதியது194748இல், அம்மையார் கேட்டது.1964இல்.அதன் பிறகு அக்குடும்பத்துடன் அடியேனுக்கு நெருங்கிய தொடர்பு ஏற்பட்டது. ஜஸ்டிஸ், பா.ச.கைலாசம் சென்னை உயர்நீதி மன்றத் தலைமை நீதிபதி பதவியை விட்டுத் தில்லி உச்ச நீதிமன்ற நீதிபதி பதவிக்குப் போகின்ற காலம் (பிப்ரவரி - மார்ச்சு 1977 அப்பொழுதுதான் என் பாண்டிநாட்டுத்திருப்பதிகள் என்ற நூலுக்கு (மார்ச்சு 1977) அணிந்துரை வழங்கினார். அதற்குப் பிறகு சுமார் பத்து ஆண்டுகளுக்குப் பின் ஞானசம்பந்தர் என்ற ஆய்வு நூலுக்கு நவம்பர் 198630 எண்சீர் விருத்தங்கள் அடங்கிய சிறப்புப் பாயிரமாலை அளித்து வாழ்த்தினார்கள். அந்தக் கவிதைத் திறனைக் காட்ட மூன்று கவிதைகளை ஈண்டுத் தருவேன். சுப்புரெட்டி யாரென்று சொல்லும் போதே சுகமான சுவைமிக்க தமிழ்ம ணக்கும் ஒப்பரிய ஆராய்ச்சித் திறன்கள் மிக்க உயர்வுடைய நூல்களின்நற் சங்கொ லிக்கும் செப்பமுள்ள சிந்தனையின் ஆழத் துள்ளே திகழ்ந்தொளிரும் முத்தான கருத்துப் பூக்கும்