பக்கம்:வாழும் கவிஞர்கள்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

VIII தேனியைப் போலத் தமிழ் கூறும் நல்லுலகிற்கு உழைக்கும் நற்றமிழறிஞர் ந. சுப்புரெட்டியார். கவிஞர் முடியரசன் தொடங்கி, மரபில் உருவாகி புதுமையில் பூத்த வைரமுத்துவரை சிறந்த கவிஞர்களை, தமிழ் கூறும் நல்லுலகின் மணிமுடியாய் திகழும் மாபெரும் கவிஞர்களின் புதையலை ஆய்வு செய்திருப்பது பாராட்டுக்குரியது. - தோண்ட, தோண்டப் புதையல் கிடைப்பதைப்போல, அரிய இந்த படைப்பாளிகளின் படைப்பை ஆய்வுசெய்யச் செய்ய, புதிய புதிய செய்திகள் கிடைக்கின்றன. நல்ல முயற்சி! பாராட்டுக்குரியது. அறக்கட்டளைச் சொற்பொழிவின் நிகழ்விடமாகிய இராமசாமி தமிழ்க் கல்லூரியும் நூல்வெளியிடும் மெய்யம்மை பதிப்பகத்தாரும் நம் பாராட்டுக்குரியவர்கள். தமிழ்க் கல்லூரி முதல்வர் நமது தமிழாகரர் தெ. முருகசாமி அவர்கள் காலத்தில், நல்ல பணியைச் செய்திருக்கின்றார். தமிழ் கூறும் நல்லுலகிற்கு வளம் சேர்க்க உழைத்திருக்கின்றார். உணவிற்கு உப்பு போல, தமிழ் கூறும் நல்லுலகிற்கு சுப்புரெட்டியார் படைப்புகள் தவிர்க்க முடியாதவை தமிழ், தழைக்கும் பணியில் தளராது பாடுபடும் சுப்புரெட்டியாருக்கு இனிய நெஞ்சுநிறை பாராட்டுக்கள்! என்றும் வேண்டும் இன்ப அன்பு. பொன்னம்பல அடிகளார். திருமறைகளே நமது மறை திருக்குறளே நமது பொதுமறை