பக்கம்:வாழும் கவிஞர்கள்.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76 வாழும் கவிஞர்கள் கற்பனைச் சிகரங்களைக் காட்டி நிற்கின்றது. சான்றோர் பிரிவில் பல நல்ல கவிதைகள் காணப் பெறுகின்றன. இவை பெரும்பாலும் சுந்தர மூர்த்தியின் திருத்தொண்டத் தொகைப் பாணியிலும் பாரதியார், பாவேந்தர், கவிமணி இவர்கள் பாணியிலும் அமைகின்றன. பல பெரியோர்கள்-சான்றோர்கள் அம்மையாரின் கவிதைகள் மூலம் நமக்குக் காட்சி தருகின்றனர். பெரும்பாலோர் பாடல்கள் நீளமான அகவலில் அமைந்திருப்பதால் அவற்றை ஈண்டுக் காட்ட முடியவில்லை. ஒருசிலரை மட்டிலும் காட்டுவேன். எதுவழி என்று காட்டி இருவினை தவிர்க்க வந்த முதியவர் தேவ ரத்தின் மூவரில் ஒருவர் அப்பர் நிதியவர் எங்கட் கென்றும் நினைப்பினை நெஞ்சில் என்றும் பதித்தவர் நடக்கத் துக்கும் பாதங்கள் நீடு வாழி! என்பது அப்பரது பெருமை காட்டும் எட்டுப் பாடல்களில் ஒன்று. சாதியா பெரிது ஒத்த தன்மையே பெரிது, செல்லும் பாதையா பெரிது? பக்திப் பயணமே பெரிது என்னும் சேதியால் எங்கும் சென்றே அருளெனும் செடியை நட்ட மேதையாம் இராம லிங்கர் மேன்மையை அறிவோம் நாமே...! என்பது அருட்பிரகாசவள்ளலாரை அறிமுகம் செய்வது. ஊனுடம் பெடுத்துத் தெய்வம் உலகினில் அவதரித்தும் ஞானதன் னெறியைக் காட்ட நயந்துநம் இராம கிருஷ்ணர் ஆன்மிகம் என்று சொல்லும் அரியதோர் உண்மைக் கிந்த