பக்கம்:வாழும் கவிஞர்கள்.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாழும் கவிஞர்கள் சிந்திடும் சொற்கள் யாவும் செந்தமிழ்த் தேனை யள்ளி வந்திடும், வாடு கின்ற மனத்தினுக் கென்றும் சாந்தி தந்திடும் உன்னைச் சார்ந்து சரனெனக் கிடப்போர் தங்கள் முந்திய வினைகள் எல்லாம் முறிந்திடப் பெறுவர் தாமே திருவாங்கம் ஆண்டவன் சுவாமிகளைப் பற்றிய ஆறு பாடல்களில் ஒன்று. கருடன்தன் மந்திரத்தால் கண்டனைநீ வாசி தருமுகனின் மந்திரத்தைத் தாவியவன் வந்து பெரும்புகழே சேர்கவெனப் பேசினனே ஆசி அருமையிது ஆர்பெற்றா ரால். துப்புல் பிள்ளை என வழங்கும் வேதாந்த தேசிகரைப் பற்றிய பன்னிரண்டு வெண்பாக்களில் இது ஒன்று. இரும்புமனம் கொண்டுலகில் கொடுமை செய்தே எப்போதும் வாழ்ந்திருந்த வெள்ளைக் காரர் கரும்பனைய இன்மொழியைக் கேட்ட தாலே கல்லுருகும் தன்மையிலே உருகி உள்ளம் விரும்பிஒரு நல்வழியைத் தேடிக் கொண்டார் வேல்வாளை எறிந்துவிட்டுச் சரண டைந்தார் அரும்பியது புதுமகிழ்ச்சி அவர்கள் வாழ்வில் அண்ணலிவர் புதுப்பார்வை பட்ட தாலே ! சிதமான பூதான யக்ஞம் இயற்றி வரலாற்றுப் புகழ்பெற்ற வினோபா வே பற்றிய நான்கு பாடல்களில் இஃதொன்று. நோற்றது பெரிதோ ஞானி நூறுநூ றாண்டுக் காலம் வேற்றவர் பூட்டி விட்ட விலங்கினை உடைக்கத் தாவி ஆற்றொனாத் துயரை யெல்லாம் அகமகிழ்ந் தையர் வாழ்வில்