பக்கம்:வாழும் கவிஞர்கள்.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செளந்தரா கைலாசம் 79 ஏற்றதே பெரிது! மக்கள் இதயத்தில் அவரோர் தெய்வம் ! திருச்சி வரகனேரியைச் சார்ந்த வ.வெ.சு அய்யர் பற்றிய முப்பத்திரண்டு பாடல்களில் இஃதொன்று சாதி வேற்றுமை காட்டியதன் காரணமாகத் தந்தை பெரியார் காங்கிரசுக்கே முழுக்குப் போட்டதாக வரலாறு. யாரெது சொன்னா லென்ன ஆத்திரப் பேச்சால் உன்றன் சீரதை வயிரக் குன்றைச் சிதைக்கவா முடியும்? இந்தப் பாரதம் உனது தெய்வம்; பக்தியை அறியும், தீட்டும் கூரிய மதியை என்றும் குவலயம் புகழும்; வாழி! கண்ணுதல் வந்து நெற்றிக் கண்ணினைத் திறந்த போதும் எண்ணிய சொன்ன வீரன் இணையிலாக் கீர னாக மண்ணிலே வாழ்ந்த அந்த மனிதருள் மனிதன் நீயோ? திண்ணிய நெஞ்சங் காட்டத் திரும்பவும் வந்திட் டாயோ? அருமை இராஜாஜியைப் பற்றிப் பாடிய பாடல்களில் இவை இரண்டு. தன்னாடு தாழ்ந்ததனைக் கண்டு துன்பம் தாங்காத தன்மான வீரர் இந்தத் தென்னாடு பெற்றெடுத்த தீரத் தியாகத் தீயினிலே மூழ்கவந்த சூரர் எங்கள் பொன்னாடு பொன்னாடு என்று கண்ணைப் போலஅதைக் காக்கும்அரு ளாளர் இன்று என்னாடும் போற்றும்அறி. வாளர் மக்கள் ஏற்றமுறப் பல்லாண்டு வாழ்க! வாழ்க..! பெரியவர் காமராசரைப் பற்றிய பலவகைப் பாடல்களில் இஃது ஒன்று. வெற்றுவாய்ச் சொல்லின் வீரர் வீசிடும் அபவா தத்தை