பக்கம்:வாழும் கவிஞர்கள்.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82 வாழும் கவிஞர்கள் 5. கவிச் செம்மல் டாக்டர். ரெ. முத்துக்கணேசன் இவர் செட்டி நாடு ஈன்றெடுத்த முத்து. காரைக்குடியில் பிறந்தவர் 1927), காரைக்குடியில் உயர்நிலைக் கல்வியை முடித்துக் கெண்டவர். இயல்பாகவே கவிதையுள்ளம் படைத்தவர். தமிழ்ப் புலவர்கள். திரு.க.தேசிகன், திரு. அமிர்தலிங்கம் போன்றவர்களின் தொடர்பினால் கவிதை இயற்றும் திறன் இவருக்கு வளர்ந்தது. இவர் குழந்தைக் கவிஞரும் கூட. 'அமுதம் என்ற பெயரில் குழந்தைக் கவிதைகளின் தொகுப்பு வெளிவந்துள்ளது. இவர் சத்துவகுணம் மிக்கவர். ஆதலால் அமைதியான போக்கு இவர்தம் இயல்பாக அமைந்தது. அதன் வழியாக இறையன்பும், இறைவழிபாடும் இவர்தம் அரிய பண்புகளாக அமைந்தன. வாழ்க்கை முழுதும் கவிதைகளை இயற்றுவதே இவர்தம் சிறந்த பண்பாக இருந்து வருகின்றது. இவர்தம் கவிதைகளில் தெய்வப் பாடல்களும், தெய்வ நெறியில் வாழ்ந்த அருளாளர்களைப் பற்றிய பாடல்களுமே அதிகமாக உள்ளன. எழுபது அகவையைத் தாண்டிய இவருக்கு அண்மையில் உள்ள மதுரை-காமராசர் பல்கலைக்கழகம் தமிழ்ச் செம்மல் விருதினை வழங்காதது வியப்பினைத் தருகின்றது. அந்த விருதினை இவருக்குத் தருவதால் பல்கலைக் கழகத்துக்குத்தான் பெருமை. இத்தகைய கவிச்செம்மலின் கவிதைகள் காட்டும் நயத்தில் ஆழங்கால் படுவோம். இவர்தம் பாடல்களில் பெரும்பாலும் பக்தியே மீதுர்ந்து நிற்பதைக் காணலாம். வேறுபல பொதுத் தலைப்புகளிலும் பாடல்கள் காணப் பெறுகின்றன. அப்பாடல்கள் பெரும்பாலும் வெண்பா, எண்சீர் விருத்தம், தாழிசை முதலிய யாப்பு வகைகளில் அமைந்திருப்பதைக் காணலாம். தமிழ் இலக்கியங்களில் இவர் கொண்டிருக்கும் அதிகமான ஈடுபாடிற்குச் சான்றாக இவர்தம் தமிழ்த்தொகை என்ற நூல் அமைகின்றது. இந்த நூல் எண்பது பாடல்களின் விளக்கம் கொண்டது. இவை தனிப்பாடல் திரட்டு கா.சு.பிள்ளை பதிப்பு, பெருந்தொகை, தொல்காப்பியப் பொருளதிகாரம், பேராசிரியம், நச்சினார்கினியம், யாப்பருங்கலக் காரிகை, யாப்பருங்கல விருத்தி, தண்டியலங்காரம், வீரசோழியம். தமிழ்நாவலர் சரிதை, தனிச்செய்யுட் சிந்தாமணி, பிற்காலச்