பக்கம்:வாழும் கவிஞர்கள்.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ரெ. முத்துக்கணேசன் 83 சோழர் சரித்திரம் பாண்டியர் வரலாறு (டி.வி.சபண்டாரத்தார் போன்ற நூல்களில் தேர்ந்தெடுத்த பாடல்கள் கம்பனடிப்பொடி சாகதந்த கல்வெட்டுப் பாடல்கள் , திருக, தேசிகன் பாடல்களுடன், தம்முடைய பாடல்களும் ரசிகமணி, டி.கே.சி. பாணியில் விளக்கம் பெற்றிருப்பவை ஆகும். கவிஞரின் தமிழ்ப்பற்று தமிழ்த்தொகை என்ற நூலில் கடல்வாய்ப் புகுந்தாய் கறையான்வாய்த் தப்பி இடர்வாய்ப் பலமொழியும் ஈன்றாய் - படர்தமிழே காலப் பிறைகண்டும் கன்னியென் பாருன்னை ஞாலத் தவர்மயக்கோ நன்று. என்ற பாடலால் சிறப்பாக விளங்குகிறது. எங்கும் பரவி நிற்கும் தமிழே. உன்னைக் கடல் கொண்டது. அதனுள்ளும் புகுந்து மீண்டாய். அறியார் கையில் தவழ்ந்த நீ தேடுவாரற்ற நிலையில் கறையானுக்கு இறையானாய், அதனின்றும் தப்பிப்பிழைத்தாய்.இவ்வாறு பல வழியில் துன்புற்ற காலத்தும் பல மொழிகளை ஈன்றாய். பல்லாயிரம் பிறைகண்டு வாழ்ந்தாய். பல மொழிகட்கும் தாயாக விளங்கும் உன்னை இவ்வுலக மக்கள் மயக்கத்தாலோ என்னவோ "கன்னி கன்னி' என்றே வழங்குகின்றனர். இதுவே நன்று என்பதன் விளக்கம். எனக் கவிஞர் தாமே விளக்கம் தருவது சிறப்பாக உள்ளது. இவ் விளக்கம் பிறப்பே இல்லாத சிவபெருமானை " ஆதிரையான் - ஆதிரையான் ஆதிரை நட்சத்திரத்தில் பிறந்தவன் என்று சொல்வது போலுள்ளது என்று கூறும் முத்தொள்ளாயிரப் பாடலை இவ்விடத்தில் நினைவு கூரச்செய்கிறது. இது தவிர தமிழ்பற்றி வரும் எல்லாப்பாடல்களும் இக் கவிஞரின் ஆழ்ந்த தமிழ்ப் பற்றினைக் காட்டுகின்றன. தமிழ் ஊசல் என்ற தலைப்பில் ஒரு பாடல், வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்து நின்று வானுறையும் தெய்வமா வழிகள் கூறும் துய்யமொழி முப்பாலாம் ஆரம் ஆடத் தொல்சங்கத் தொகைநூலாம் அணிகள் ஆடச் செய்யதிரு வாசகங்கள் இசைமு ழக்கச் சிவமாக்கும் திருமுறைகள் போற்றி செய்யப்