பக்கம்:வாழும் வழி.pdf/100

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

98

வாழும் வழி


ஆங்கு வெளியிட்ட பல கருத்துக்களுள் குடிசையைப் பற்றிக் கூறிய கருத்துக்களை மட்டும் இவண் தருகிறேன். இக் கட்டுரையின் நோக்கமும் இதுதானே!

“பெரியோர்களே இவ் வீட்டுப் பெரியார், என்னை அழைக்கவந்த வன்று, தம் குடிசையில் தங்கி விருந்து அருந்திச் செல்லவேண்டு மென்று கோரினார். யான் இங்கு வந்து சேர்ந்ததும், ‘குடிசைஎன்று கூறியதால் ஏமாந்துவிட்டீர்களா?’ என்று என்னைக் கேலியும் செய்தார். உண்மையில் யான் ஏமாறவேயில்லை. ஏமாந்தவர் அவரே எப்படி? குடிசை என்றதும், ஓலை வேய்ந்த கூரை வீட்டை நினைத்துக்கொண்டிருப்பேன் என்பது அவர் நினைப்பு. அதுதானில்லை. குடிசை என்றால் குடியிருக்கும் இடம் என்பது பொருள் என்பது என் நினைப்பு. எனவே, அவர் மாட மாளிகையில் இருப்பினும், அல்லது மண் கூரையிலிருப்பினும் அவரிருக்குமிடத்தைக் ‘குடிசை’ என்று கூறுவேன் யான். இதைப் பற்றிச் சிறிது சொல்லாராய்ச்சி செய்து பார்ப்போம்:

நம் பழந்தமிழ் முன்னோர்கள், மக்கள் குடி இருக்கும் இடத்தை ‘குடிசை’ ‘குடில்’ ‘குடிசல்’ முதலிய சொற்களால் குறிப்பிட்டு வந்தார்கள். பண்டைக்காலத்தில் முதல் முதல் மனிதன் அமைத்த வீடு, கால் (மரக்கிளை) அல்லது மண்சுவரின் மேல் தழை அல்லது ஓலை வேய்ந்த பரண் அல்லது கூரையேயாகும். இத்தகைய வீடுகளையே மேற்கூறிய சொற்களால் குறிப்பிட்டு வந்தார்கள். பொதுவில் பார்க்கப் போனால், குடியிருக்கும் காரணத்தினாலேயே குடிசை - குடில் - குடிசல் என்ற

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழும்_வழி.pdf/100&oldid=1109668" இருந்து மீள்விக்கப்பட்டது