புலவர் சுந்தர சண்முகனார்
99
பெயர்கள் வீட்டிற்குக் கொடுக்கப்பட்டன என்பது விளங்கலாம். இம் மூன்று சொற்களையும் இவ்வுருவத்திலேயே தமிழகராதிகளும் தமிழ் நூற்களும் பெற்றிருக்கின்றன. இவ்வுருவத்தில் இச்சொற்களை எழுதினாலும் பேசினாலும், இலக்கணமாக எழுதுவதாகவே பேசுவதாகவே கருதப்படும். ஆனால் உண்மையில் இவை இலக்கண முறை மாறாத சொற்கள் அல்ல. ஆமாம் போலிருக்கிறது என்ற சொல்லை ‘ஆமாம் பெலக்கு’ என்ற பேசுவதுபோல் பேசப்படுகின்ற சொச்சைச் சொற்களே இவைகள். அங்ஙனமாயின் இவற்றின் சரியான உருவங்கள்யாவை என்பதை ஆராய்ந்து காணவேண்டியது நம் கடமையாகும்.
தமிழ் மொழியில், ‘செய்‘ என்னும் சொல்லுக்கு நிலம் என்ற பொருளுண்டு. நன்செய் - புன்செய் என்னும் சொற்களை நோக்கினும் இவ்வுண்மை புலனாகும். ‘இல்’ என்னும் சொல்லுக்கு இருப்பிடம் என்ற பொருள் உண்டு. இல்லறம், இல் வாழ்க்கை, இல் வாழ்வான், இல்லம் என்ற சொற்களை நோக்குக. எனவே, இப் பொருளையொட்டியே நம் பழந்தமிழ்ப் பெரியோர்கள் குடியிருக்கும் நிலப்பகுதி என்ற பொருளில் ‘குடிசெய்’ (குடி செய்) என்றும், குடியிருக்கும் இடப்பகுதி என்ற பொருளில் ‘குடியில்’ (குடி இல்) என்றும் பெயர் வழங்கினார்கள். இவை நாளா வட்டத்தில், குடிசெய் - குடிசெய் - குடிசை - குடிசை என்றும், குடியில் - குடிசெய் - குடிசை - குடிச என்றும், குடியில் - குடியில் - குடில் - குடில் என்றும் குறைந்து மருவிவிட்டன. ‘செய்’ என்பதை ‘சை’ என ஒலிக்கும் வழக்கம். நன்செய் -