உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வாழும் வழி.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

102

வாழும் வழி


நம் தமிழ் மன்னர் பனிமலை வரை படையெடுத்துச் சென்று தம் திறமை காட்டி வெற்றி பெற்று மீண்டனர். நாட் பல கடந்தன. வடநாட்டிலே மண நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. வட மன்னர் பலர் குழுமியிருந்தனர். அவ்வமயம், “முன்பு தமிழ் மன்னர் ஈண்டுப் போந்து பொருதபோது எம்போலும் முடிமன்னர் ஈங்கில்லை போலும்” என்ற ஒலி அவர் குழுவிலிருந்து எழுந்தது. இச் செய்தியைச் சேரமன்னனாம் செந்தமிழ்ச் செங்குட்டுவன் சிலரால் செவியுற்றனன். வந்தது சினம். “அவ்வட மன்னரின் இகழ்ச்சிக் கூற்று எனக்கு மட்டுமன்று; சோழ பாண்டியர் முதலாய எம்போலும் தமிழ் மன்னர் யாவர்க்கும் உரியதே; ஆதலின் எங்களை நகையாடி யெள்ளிய அவர்களின் தலையில் கண்ணகியின் வடிவக் கல்லை வைத்துச்சுமக்கச்செய்து ஈங்குக் கொணர்வேன்” என்று சூளுரைத்தனன். உரையோடல்ல - உரைத்த வண்ணம் செய்தும் காட்டினன். என்னே இவன்றன் மொழிப்பற்றும், நாட்டுப் பற்றும் பண்டைய தமிழ் மன்னனுக்கே இவ்விதமான பற்றிருக்குமாயின் இன்றைய குடிகளாகிய நமக்கு எவ்வளவு பற்று தேவையென்பது சொல்லாமலே விளங்கும். நாட்டுப் பற்றோடு மொழிப்பற்றும் இருந்தால்தான் பொன் மலர் நாற்றமுடைத்தாதல் போல் சிறக்கும். ஆதலினால் தமிழர்கட்குத் தமிழ்ப்பற்று சிறக்க வேண்டும். அதே நேரத்தில் பிறமொழி வெறுப்பும் கூடாது.

எவ்வெச் செயல்கள் தமிழ்ப் பற்றுடைய செயல்களாகக் கருதப்படுமெனின், கூடிய வரையிலும் தமிழ்மொழியிலேயே பேசுதல், இன்றியமையாமை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழும்_வழி.pdf/104&oldid=1110123" இலிருந்து மீள்விக்கப்பட்டது