பக்கம்:வாழும் வழி.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் சுந்தர சண்முகனார்

105


இரண்டு மூன்று நூற்றாண்டுகட்கு முன்பே அடிகளார் இங்ஙனம் பாடியிருக்கின்றனர் என்றால் தற்போதைய மக்களின் நிலையைச்சொல்ல வேண்டுவதின்று. இதனால் ‘தமிழ் மறையினையே பொதுமக்கள் விரும்பிக் கேட்கின்றனர்’ என்று அறிகின்றோம். அன்றியும் திருக்கோயில் வழிபாடு ஏற்படுத்தப்பட்டது முற்றத் துறந்த முனிவனுக் கல்ல. அவனுக்குக் கோயில் எதற்கு? குளம் எதற்கு? இன்றி யமையாததாய்ப் பொதுமக்கட்கே ஏற்படுத்தப்பட்டது. அங்ஙணமிருக்கத் தமிழ்நாட்டுப் பொதுமக்களால் விரும்பிக் கேட்கப்படாத வடமொழிப் பாட்டுக்குத் தமிழ் நாட்டுக் கோயில்களிலே முதலாட்சியா? தமிழ் நாட்டிலே தமிழர்களால் கட்டப்பட்ட தமிழ்க் கோயில்களிலே தமிழர்களின் நடுவிலே கூடவா தமிழ் மொழி இரண்டாம் மொழியாகக் கருதப்படுவது? இதனால் வடமொழி வேண்டாவெனக் கூறவரவில்லை; தமிழ்ப் பாட்டுக்களினாலேயே வணங்கங் கூறப்பட வேண்டும் என்பதே ஈண்டு நோக்காகும்.

சிவப்பிரகாச அடிகளாரே சோணசைல மாலை என்னும் மற்றொரு நூலில்,

“விரைவிடை யிவரும் நினைப் பிறவாமை
வேண்டுநர் வேண்டுக மதுரம்
பெருகிய தமிழ்ச்சொல் மலர்நினக் கணியும்
பிறவியே வேண்டுவன் தமியேன்”

எனக் கூறியுள்ளார். இதன் விளக்கமான கருத்தாவது: “கடவுளே! எனக்குப் பிறப்பு வேண்டாம் - பிறப்பு வேண்டாம், வீடே வேண்டும், என்று நின்னை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழும்_வழி.pdf/107&oldid=1110128" இலிருந்து மீள்விக்கப்பட்டது