பக்கம்:வாழும் வழி.pdf/11

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் சுந்தர சண்முகனார்

9வாழ்வு என்றால் வாழ்தல் என்றால் என்ன? என்று பார்ப்போமா? எந்த அகராதியைப் பார்த்தால் இதற்குப் பொருள் காணலாம்! வேண்டியதில்லை - பணம் போட்டு வாங்கிய எந்த அகராதியும் நமக்கு வேண்டியதில்லை. மக்கள் அகராதியில் அஃதாவது - மக்களின் பேச்சு வழக்கில் இஃது எந்தப் பொருளில் ஆளப்படுகிறது என்று நோக்குவோமே!

“அவர் எண்பது ஆண்டுகள் வாழ்ந்தார்”, “என் மகள் மதுரையில் வாழ்கிறாள்”, “அது வாழ்ந்த குடும்பம்'”, “அவருக்கு வாழ்வுவந்துவிட்டது, இனிமேல் நம்மைத் திரும்பிப் பார்ப்பாரா” - “அவர்கள் வாழாதும் வாழ்ந்து வாழைக்குலை சாய்ந்தார்கள்”.

முதலிய வாக்கியத் தொடர்களை நோக்கின், வாழ்தல் என்பதன் பொருள் ஓரளவு புலனாகக் கூடும். ‘என்பது ஆண்டுகள் வாழ்ந்தார்’ என்பதில், வாழ்தல் என்றால் உயிர் வாழ்தல் என்றுதானே பொருள்? ‘மகள் மதுரையில் வாழ்கிறாள்’ என்பதில், மகள் கணவனுடன் ஒன்றிக் குடியும் குடித்தனமுமாய் இருக்கிறாள் என்பது கருத்தன்றோ? ‘அது வாழ்ந்த குடும்பம்’ என்பதில், சீரும் சிறப்புமாய் விளங்கிய குடும்பம் என்பது பொருள் அல்லவா? ‘அவருக்கு வாழ்வு வந்துவிட்டது’ என்பதில், பட்டம் பதவி பணம் முதலியன பற்றிச் செருக்கு வந்து விட்டது என்பது கருத்து. ‘வாழாதும் வாழ்ந்து வாழைக் குலை சாய்ந்தார்கள்’ என்பதில், வாழை வளர்ந்து வாழ்ந்து பல கீழ்க்கன்றுகளை ஈன்று, இறுதியில் குலை தள்ளிச் சாய்வது போல், மக்கள் பிறந்து வளர்ந்து குழந்தைகளைப் பெற்றுப் பேரப் பிள்ளைகளையும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழும்_வழி.pdf/11&oldid=1103452" இருந்து மீள்விக்கப்பட்டது