பக்கம்:வாழும் வழி.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

108

வாழும் வழி


அகற்றி, தமிழே வென்று ஆட்சிபுரிய வேண்டும் என்று பன்னிரண்டாம் நூற்றாண்டிலேயே கனவு கண்டிருப்பதை இந்த நூற்றாண்டிலாவது நனவாக்க வேண்டும்.

இதுகாறுங் கூறியவற்றால், “தமிழராய்ப் பிறந்த ஒவ்வொருவர்க்கும் தமிழ்மொழிப்பற்று இருக்க வேண்டும். அம்மொழிப் பற்றினை எல்லாவகையிலும் காட்ட வேண்டும். அம்மொழிப்பற்று பலவகையாகத் தமிழர்களால் நடத்தப் பெற்றுக் காட்டப்படினும் திருக் கோயில்களிலே தமிழ் மொழியினால் வழிபாடாற்றல் ஒன்று மட்டும் இன்னும் நிகழப் பெறவில்லை. சிறப்பாகத் தமிழ் மொழியினாலேயே கடவுள் வணக்கஞ் செய்ய வேண்டுமென்பதைத் துறைமங்கலம் சிவப்பிரகாச அடிகளார், தெய்வப் புலவர் சேக்கிழார் பெருமான் முதலியோர்களின் அருள் மொழிகள் அறிவிக்கின்றன. ஆதலின் தமிழ்நாட்டுக் கோயில்களிலே தமிழ்மொழிக்குத்தான் முதலாட்சி அளிக்க வேண்டும்.” என்னும் பல கருத்துக்களை அறிந்துகொள்ளுகின்றோம்.

ஆகவே, நம் தமிழர்களைத் தமிழ்ச் சொல்லால் பாடிய பாட்டாகிய தமிழ்ச் சொல் மலரையே ஆண்டவனுக்குக் கோயில்களில் சூட்டுவிக்கும்படி யாகவும் அதற்குச் செய்யவேண்டிய ஆயத்தங்களைச் செய்யும்படியாகவும் வேண்டுகின்றேன்.

“என்னை நன்றாக இறைவன் படைத்தனன்
தன்னை நன்றாகத் தமிழ்செய்யு மாறே”

-திருமூலர்
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழும்_வழி.pdf/110&oldid=1110761" இலிருந்து மீள்விக்கப்பட்டது