உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வாழும் வழி.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.


4. விஞ்ஞானவியல்


15. விஞ்ஞான வித்தின் விரிவு

உலகம் முன்னினும் இவ்விருபதாம் நூற்றாண்டில் பெருவளர்ச்சி பெற்றுள்ளதென்பது கண்கூடு. வளர்ச்சியென்றால் நாடகத்தில் அதிலும் பேசும் படக்காட்சியில் ஒரே விநாடியில் குழந்தை பெரிய மனிதனாக ஆகிவிடுகின்ற அத்தகைய வளர்ச்சியன்று. வீட்டில் குழந்தை படிப்படியாக வளர்ந்து பெரிய மனிதனாக ஆகும் வளர்ச்சியைப் போன்றதே உலகின் வளர்ச்சியும். இந்நுட்ப முணராதார் சிலர், உலகின் இன்றைய புதுவளர்ச்சியின் பொலிவு நோக்கிப் புகழ்ந்து, பழைய மந்த நிலையைப் பழித்து இழித்துரைக்கின்றனர். இஃது எம்மட்டுப் பொருந்துமென்று சற்றாராய்வோம்.

மனிதனுக்கு ஒவ்வொரு பருவத்தில் ஒவ்வொரு துறையில் ஒவ்வொரு விறுவிறுப்பு முனைப்புற்றிருக்கும். அவ்வவ்வதனை அவ்வப்போது ஒரு வெற்றியாகக் கருதி அவன் வரவேற்கின்றான். குழந்தைப் பருவத்தில் குழந்தை, தன்னைப் பிறர் தூக்கி வைத்திருக்கும்போது, அவர்களுடைய பிடியிலிருந்து தப்பித்தன்தாயின் மடியை யடைவதில் ஒரு விறுவிறுப்புக்கொள்கின்றது. அடைந்த போது வெற்றிக்கறிகுறியான மெய்ப்பாடுகள் அதன் மெய்யிற்படுகின்றன. அயல்நாட்டின் மேல் அணுகுண்டு வீசி வெற்றியடைந்தவர் கொள்ளும் மனமகிழ்ச்சிக்குக் குறைந்ததாக அக்குழந்தையின் மனமகிழ்ச்சியை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழும்_வழி.pdf/111&oldid=1110762" இலிருந்து மீள்விக்கப்பட்டது