பக்கம்:வாழும் வழி.pdf/118

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

116

வாழும் வழி


அவன் ‘நாற்காலி செய்கிறேன்’ என்றுதானே பதில் சொல்வான். எனவே ஒருவன் நாற்காலி செய்வதற்கு ஒரு நாள் பிடிக்குமென்றால், முதல் விநாடியிலிருந்து கடைசி விநாடி வரையும், அவனால் செய்யப்படும் பொருளுக்குப் பெயர்நாற்காலியே என்பது பட்டப்பகல் ஞாயிறேபோல் திட்டமாய்த் தெரியவருமே!

விஞ்ஞானத்தின் பிரிவு

மேல் எடுத்துக்காட்டப்பட்ட நாற்காலியின் தோற்றம்தான் விஞ்ஞானத்தின் தோற்றமும். தச்சன் கையில் உளியை யெடுத்ததுமே நாற்காலியென்னுஞ் சொல் பிறந்துவிட்டதைப்போல, இயற்கையாய் விளைந்த காய், கனி, கிழங்குகளை உண்டுவந்த மனிதன் செயற்கைாகப் பயிரிடத் தொடங்கியதுமே விஞ்ஞானம் வெளிப்பிறந்துவிட்டது. தலையில் பொருள்களைச் சுமந்து திரிந்த மனிதன், உருளை செய்து வைத்து இழுக்கத் தொடங்கி அன்றே, பெரிய பெரிய “லாரி”களும் புகைவண்டி முதலியனவும் செய்வதற்கு வித்திட்டுவிட்டான். அவ்விஞ்ஞான வித்து நாளடைவில் படிப்படியாக வேரூன்றி, முளையின்று, தண்டு நீண்டு, கிளைத்து, தளிர்த்து, தழைத்து பூத்துக் குலுங்குகின்றது இன்றைக்கு! (இனி வரப்போகும் விஞ்ஞான வளர்ச்சியைக் காய்கனியாகக் கூறுவது சாலும்.) அன்று தழையை மென்று தண்ணீரைக் குடித்த மனிதனை இன்று ஒன்பது வெண் பொற்காசு செலவில் ஒரு வேளையுணவு உண்ணச் செய்கிறது. அன்று மலைப்பிளவில் வாழ்ந்த மனிதனை, இன்று நூற்றிருபது அடுக்கு மாளிகையுள் நுழைந்து வாழச் செய்கின்றது. அன்று தழையுடுக்கவும் அறியாதிருந்த மனிதனை, இன்று ஆயிரம் வெண்பொற்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழும்_வழி.pdf/118&oldid=1111520" இருந்து மீள்விக்கப்பட்டது