பக்கம்:வாழும் வழி.pdf/12

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

10

வாழும் வழி


கொண்டு குடும்பம் செழிக்க முழு நிறைவோடு முடிதலைக்குறிக்கும்.

மேற்குறிப்பிட்டுள்ள வாழ்வுகள் அனைத்தும் ஆறறிவு பெற்ற உயர்திணைப் பொருளாகிய மக்களுக்கு மட்டுந்தானா உண்டு? அஃறிணைப் பொருள்களாகிய பறவை விலங்குகட்கும் உண்டன்றோ? அவையும் உழைக்கின்றன, உண்ணுகின்றன, உறங்குகின்றன, குஞ்சு குட்டிகளை ஈனுகின்றன, நெடுநாள் உயிர் வாழவுஞ் செய்கின்றன. எனவே, அவற்றின் வாழ்வும் மக்களின் வாழ்வும் ஒன்றுதானா? இடையே வேற்றுமை யாதாக இருக்கலாம்? மக்கள்தம் வாழ்வு எத்தகையதாய் இருக்க வேண்டும்?

ஆம்! மக்களாய்ப் பிறந்தோர் வாழும் வழி என்ன? என்னும் வினாவிற்கு நாம் விடை காணவேண்டும். இவ்வளவு நாள் நாம் எது எதையோ வாழ்வு என்று எண்ணிக்கொண்டு, உலக வழக்கில் பேசியும் பெற்றும் வருகிறோமே, அது அது மட்டும் மக்களுக்கு வாழ்வாகிவிட முடியாது; பறவை விலங்குகளுங்கூட அத்தகைய வாழ்வியலை ஏறத்தாழப் பெற்றுள்ளன; ஆகவே மக்களாய்ப் பிறந்தோர் வாழவேண்டிய வாழ்வு வேறு ஏதோ உளது. அதனை நாம் கண்டுபிடித்தாக வேண்டும்; கண்டுபிடித்தால் மட்டும் போதுமா? கடைப்பிடித்தும் வாழ்ந்து பார்க்க வேண்டும், வாழ்ந்தேயாக வேண்டும்; அதுதான் உண்மையான மக்கள் வாழ்வு என்ற திட்டவட்டமான உறுதியான முடிவுக்கு இப்போது நாம் வந்துவிட்டோம் என்று கருதுகிறேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழும்_வழி.pdf/12&oldid=1103455" இருந்து மீள்விக்கப்பட்டது