பக்கம்:வாழும் வழி.pdf/122

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

120

வாழும் வழி
‘பூவாமல் காய்க்காது - மின்னாமல் இடிக்காது’ என்னும் பழமொழிக்கேற்ப அத்திமரத்திலும் பூக்கள் மிக உண்டு; அந்தப்பூக்களினால் காய்கள் கிடைப்பதும் உண்டு. ஆனால், மற்ற மரத்துப் பூக்களிலிருந்து காய்கள் உண்டாவதற்கும், அத்திப்பூவிலிருந்து காய் உண்டாவதற்கும் நிரம்ப வேறுபாடு உண்டு. வித்தை காட்டுபவன் போல் இதை வளர்த்துவதேன்? ஒரு முடிவுக்கு வந்துவிடுவோம். அத்திப் பூவேதான் காய் - அத்திக்காயேதான் பூ - பூவும் காயும் ஒன்றே. அத்திப்பூ மொட்டுபோல் இருந்தபடியே காயாகிவிடுகிறது. முல்லை மொக்காக மொட்டாக இருந்து, பின்னர் மொட்டு உடைந்து இதழ்கள் விரிந்து மலர்ந்து விடுகிறது. அதுபோல் இல்லாமல், அத்தி கடைசி வரையும் மொட்டு போலவே உருண்டையாகக் காட்சியளிக்கிறது. அந்த ஓர் உருண்டைக்குள்ளேயே பூத்துக் காய்த்துக் கனிந்துவிடுகின்றன. எனவே, ஓர் அத்திக்காய் என்பது, பல அத்திப்பூக்களின் முதிர்ந்த மாற்றமேயாகும். இதனை ‘விருந்த பரிணாம சமூகக் கனி’ என்பர் தாவர நூலார் (Botanist). இது குறித்து இன்னும் நன்றாகத் தெரிந்துகொள்ள வேண்டுமாயின், பொதுவாக, மரஞ்செடி கொடிகளின் பூ, காய், கனி ஆகியவற்றின் வரலாற்றினை ஆராய வேண்டும்.

பூவின் வரலாறு

இங்கே விளக்கத்திற்காகப் பூவரசம்பூவினை எடுத்துக்கொள்வோம். நகரங்களில் உள்ள சிலர் அறியாவிடினும், சிற்றுரர்களில் உள்ள பலரும் பூவரசம் பூவினைப் பற்றி நன்கு அறிந்திருப்பர். சிறுவர் சிறுமியர் பூவரசம் பூவினைப் பறித்து, பாவாடை கட்டிய பெண்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழும்_வழி.pdf/122&oldid=1111810" இருந்து மீள்விக்கப்பட்டது