பக்கம்:வாழும் வழி.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

122

வாழும் வழி


மஞ்சள் நிறமுடைய சிறுசிறு உருண்டைகள் இருக்கும். இக் குழாய் ‘கேசரக் குழாய்’ (Staminal tube) என்றும், மஞ்சள் நிற உருண்டை மகரந்தப் பை (Anther) என்றும் அழைக்கப்படும். கேசரக் குழாய்க்குள் உள்ள கம்பி ‘கீலம்’ (Style) எனப்படும். கீலத்தின் நுனிப்பகுதி ‘கீலாக்ரம்’ (Stigma) அல்லது கீல்நுனி எனப்படும். கீலம் அடியில் பிஞ்சுடன் தொடர்புற்றிருக்கும். இந்தப் பிஞ்சு ‘அண்டாசயம்’ (Ovary) எனப்படும். இந்தக் கீலம், கீலாக்ரம், அண்டாசயம் ஆகிய மூன்றும் சேர்ந்து ‘அண்ட கோசம்’ (Gynaecium) என்றழைக்கப்படும். பூவில் காயாக மாறும் பகுதி இந்த அண்டகோசம்தான். எனவே, இதனைப் பூவின் பெண்பாகம் என்று சொல்லலாம் அல்லவா? கேசரப் பகுதியில் உள்ள மகரந்தப் பையில் இருக்கிற ‘மகரந்தப் பொடி’ (Pollen) என்னும் பூந்துள், அண்ட கோசத்துள் விழுந்து தொடர்பு கொண்டால்தான் காய் உண்டாகுமாதலால், அம் மகரந்தப் பொடி உள்ள கேசரப் பகுதியைப் பூவின் ஆண்பாகம் என்று சொல்லலாமன்றோ?

இணையினப் பூஞ்செடிகள்

பூவரசில் ஒரே பூவில் ஆண்பாகம், பெண்பாகம் ஆகிய இரண்டும் உள்ளன. சப்பாத்தி, அகத்தி முதலியவற்றிலும் இப்படியே. இத்தகையனவற்றை ‘மிதுனச் செடி’ என்பர். நாம் இவற்றை ‘இணையினப் பூஞ்செடி’ என அழகு தமிழில் அழைப்போம்.

ஈரினப் பூஞ்செடிகள்

எல்லாச் செடிகளிலுமே ஒரே பூவில் கேசரமாகிய ஆண்பாகமும் அண்டகோசமாகிய பெண்பாகமும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழும்_வழி.pdf/124&oldid=1111818" இலிருந்து மீள்விக்கப்பட்டது