பக்கம்:வாழும் வழி.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

124

வாழும் வழி


பெண்பூவும் தனித்தனியாய் இருக்குமானால், காற்று வண்டு, தேனி, பறவை, விலங்கு முதலியவற்றின் வாயிலாக, ஆண்பூவிலுள்ள மகரந்தத் துணுக்குகள் பெண் பூவிற்கு வந்து தொடர்புற்று, கருவுற்று, காய் காய்க்கும். இதற்குப் ‘பிற மகரந்தச்சேர்க்கை’ என்று பெயராம்.

பூக்கதிரும் கொத்தும்

ஈண்டு இன்னொரு செய்தியும் அறிந்து வைக்கற் பாலது; சிலவகை மரஞ்செடி கொடிகளில் பூக்கள் தனித்தனியாகப் பூக்கும். பூவரசு, பூசணி, தாமரை முதலியன இத்திறத்தன. வேறு சிலவற்றில் பூக்கள் கொத்து கொத்தாக மஞ்சரியாகப் பூக்கும். கொன்றை, ஆவிரை முதலியன இத்திறத்தனவாம். கொத்து குலை - மஞ்சரி இனத்திலேயே பலவகை உண்டு. தென்னை, ஈச்சமரம் முதலியவற்றில் கதிர் கதிராக இருக்கும். நீளமான ஒரு கதிரில் கிளைகள் போல் பல பிரிவுகள் இருக்கும். அவற்றில் அடர்ந்து பூக்கள் இருக்கும். வாழைப்பூவும் கதிர் வகையைச் சேர்ந்ததுதான். நாம் வாழைப்பூ என்று மொத்தமாக ஒன்றைக் குறிப்பிடுகின்றோமோ அது ஒரு பூவன்று; அதற்குள் பல பூக்கள் உள்ளன. ஒவ்வொரு பூவிலிருந்தும் ஒவ்வொரு காய் உண்டாகிறது. பின்னர் நாம் இவற்றைக் ‘குலை’ என்கிறோம்.

மேற்கூறியுள்ள அடிப்படைக் கருத்துக்களோடு இனி நாம் அடுத்தக கட்டத்திற்குச் செல்ல வேண்டும்.

ஈண்டு இன்னொரு முறை நாம் பூவின் பாகங்களை சுருங்க நினைவு கூர்வோம். முதலில் பூவைத் தாங்கிக் கொண்டிருக்கும் காம்பு என்னும் விருந்தம், இரண்டாவதாக, பூவின் உள் பாகங்களை அடக்கிக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழும்_வழி.pdf/126&oldid=1111821" இலிருந்து மீள்விக்கப்பட்டது