பக்கம்:வாழும் வழி.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் சுந்தர சண்முகனார்

125


கொண்டிருக்கும் வெளிப்பாகமாகிய பூக்கிண்ணம் என்னும் புஷ்பகோசம். (விருந்தத்திற்கும் புஷ்ப கோசத்திற்கும் இடையில், புற பாகம் சில பூக்களில் இருக்கும் சிலவற்றில் இராது.) அடுத்து, புஷ்ப கோசத்திற்குள் பெண்பாகமாகிய அண்டகோசம், ஆண்பாகமாகிய கேசரம், இப்படியாக பல பகுதிகளும் சேர்ந்ததுதான் ஒரு பூ எனப்படுவது. ஆனால் பூவுக்குப் பூ அமைப்பு முறையில் பல்வகை மாறுதல்கள் இருக்கும்.

சாமானியக் கனிகள் (Simple Fruits)

பெரும்பாலான இனங்களில், பூவில் உள்ள அண்டகோசப் பகுதி மட்டுந்தான் காய்கனியாகிறது. மற்ற விருந்தம் புஷ்பகோசம், கேசரம் முதலியன பயனின்றி இற்றுவிடுகின்றன. இப்படி உண்டாகும் கனிகளுக்கு, ‘சாமானியக் கனிகள்’ அல்லது தனிக்கனிகள் என்று பெயராம். பூவரசு, வெண்டை, அகத்தி, ஊமத்தை முதலியன இத்திறத்தன.

கலப்புக் கனிகள் (Spurious Fruits)

சில இனங்களில், பூவின் பாகங்களாகிய விருந்தம், புஷ்பகோசம், அண்டாசயம், கேசரம் முதலிய பலவும் சேர்ந்து உருண்டு திரண்டு ஒரு கனியாக மாறும். இப்படி உண்டாகும் கனிகளுக்கு, ‘கலப்புக் கனிகள்’ என்று பெயராம். முந்திரி, ஆப்பில், பலா, அன்னாசி, ஆல், அத்தி முதலியன இத்திறத்தன. இவற்றுள்ளும் பலா, அன்னாசி, ஆல், அத்தி போன்றவற்றில், பல பூக்கள் கொத்தாக ஒன்று சேர்ந்து, தம் பல பாகங்களோடும் உருண்டு திரண்டு ஒரே கனிபோல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழும்_வழி.pdf/127&oldid=1111824" இலிருந்து மீள்விக்கப்பட்டது