பக்கம்:வாழும் வழி.pdf/128

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

126

வாழும் வழி


மாறிக் காட்சியளிப்பது ஈண்டு குறிப்பிடத்தக்கது. இதனை இன்னுஞ் சிறிது விரிவாகக் காண்போம்:


விருந்த பரிணாமக் கனி

முதலில் முந்திரிக் கனியை எடுத்துக் கொள்வோம். இதில் இருவேறு தோற்றங்கள் உள்ளன. அதாவது, முதலில் முந்திரிப்பழமும், அதன் நுனியில் முந்திரிக் கொட்டையும் இருக்கக் காணலாம். நாம் நினைத்துக் கொண்டிருக்கிறபடி முதலில் இருப்பது முந்திரிப் பழமன்று. நாம் முந்திரிக்கொட்டை என்று சொல்கிறோமே, அதுதான் உண்மையான முந்திரிப் பழமாகும். முந்திரிக்கொட்டை என்று தவறுதலாகச் சொல்லப்படுகின்ற உண்மையான அந்த முந்திரிப் பழத்தைத் தாங்கிக்கொண்டிருக்கும் காம்பு போன்ற விருந்தத்தையே நாம் இப்போது தவறுதலாக முந்திரிப் பழம் என்று சொல்லிக்கொண்டிருக்கிறோம். ஆனால், பழக்கத்திற்கு வந்துவிட்டதால் இவ்வாறு சொல்வது இனி தவறும் ஆகாது. முந்திரியில் விருந்தமே மக்கள் உண்ணுமளவில் நன்கு சதை பிடித்துக் கனியாக மாறிவிட்டது? அதனால் இதனை ‘விருந்த பரிணாமக் கனி’ என்றழைப்பர். பரிணாமம் என்றால், ஒன்று மற்றொன்றாய் மாறுதல் என்று (வடமொழியில்) பொருளாம். நாம் இக்கனியை, ‘காம்பு மாறிய கனி’ என்று தமிழில் அழைக்கலாம்.

உண்மையான முந்திரிப்பழம் எது என அறியாததால், நம் மக்கள், பழத்திற்குள்தானே கொட்டை இருக்க வேண்டும். ஆனால் இயற்கைக்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழும்_வழி.pdf/128&oldid=1111825" இருந்து மீள்விக்கப்பட்டது