பக்கம்:வாழும் வழி.pdf/129

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் சுந்தர சண்முகனார்

127


மாறாக, முந்திரிக்கொட்டை முந்திக்கொண்டு முன்னால் வந்துவிட்டதே என்று கருதி, துருதுரு வென்று முந்தி முந்திப் பேசுபவர்களை நோக்கி, “முந்திரிக்கொட்டை” போல முன்னே முன்னே வந்துவிடுகிறாயே என்று கண்டிப்பதை உலகியலில் நாம் காண்கிறோமல்லவா?

பரிணாம சமூகக் கனி

அடுத்த படியில் நிற்பன அன்னாசிப் பழமும் பலாப் பழமுமாகும். ஒரு முந்திரிப் பழம் என்பது ஒரு பூ அதில் விருந்தம் என்னும் தாள் சதைபெற்றுக் கனியாக மாறுகிறது. ஆனால் அன்னாசியும் பலாவும் அப்படியல்ல. ஓர் அன்னாசிப் பழம் என்பது பல பூக்களின் கூட்டாகும். அன்னாசிப் பழத்தின் மேல்புறத்தில் பிளவு பிளவாகக் காணப்படும் கண்கள் போலுள்ள ஒவ்வொன்றும் ஒவ்வொரு பூவே. அன்னாசியில் பூக்கள் கதிராக உண்டாகி எல்லாப் பூக்களின் விருந்தம் முதலிய எல்லாப் பாகங்களும் ஒரு சமூகம்போல் ஒன்று சேர்ந்து சதைப்பெற்றுப் பருத்து, மகரந்தச் சேர்க்கையும் பெற்று, ஒரே கனிபோல் வளர்ந்து உருவாகும்.

பலாமரத்திலும் மலர்கள் கதிர்களாகவே தோன்றி வளர்கின்றன. ஆனால் இதில் ஆண்பூக்களும் பெண் பூக்களும் தனித்தனிக் கதிர்களாக உள்ளன. ஆண் கதிரிலிருந்து பெண் கதிருக்கு மகரந்தச் சேர்க்கை ஏற்பட்டதும், ஆண் கதிர்கள் உலர்ந்து அழிந்துவிடும். பெண் கதிர்கள் மட்டும் வளர்ந்து கனியாக மாறும். ஒரு பலாப்பழத்திற்குள் இருக்கும் ஒவ்வொரு சுளையும் ஒவவொரு பெண் பூவாகும். நாம் உண்ணுகிற சதைப் பாகம் புஷ்பகோசம் போன்றதாகும். அதன் உள்ளே பை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழும்_வழி.pdf/129&oldid=1111828" இருந்து மீள்விக்கப்பட்டது