பக்கம்:வாழும் வழி.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் சுந்தர சண்முகனார்

129



புலனாகும். தெளிவுக்காக ஒரு பெரிய சீமை அத்திக் கனியை எடுத்து இரண்டாகப் பிளந்து பாருங்கள். விருந்தக் கிண்ணத்தின் மேல் விளிம்பையடுத்து

சீமை அத்திக்கனி

உட்புறமாக ஆண்பூக்கள் இருப்பதையும், கனியின் நடுப்பகுதியிலும் அடிப்புறத்திலும் பெண் பூக்கள் இருப்பதையும் காணலாம். (இவ்விரு வகைப் பூக்களும் மேலுள்ள படத்தில் தனித்தனியாகப் பெரிதாக்கிக் காட்டப்பட்டுள்ளன.) எனவே, அத்தியிலும், ஆலிலும் பல பூக்கள்தம் பல பாகங்களோடு ஒரே சமூகமாக ஒன்று சேர்ந்து, மகரந்தச் சேர்க்கை பெற்று ஒரே கனிபோல உருவாகியுள்ளன என்பதை உணரலாம். இக்கனிகளுக்கு, ‘விருந்த பரிணாம சமூகக் கனிகள்’ என்று பெயராம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழும்_வழி.pdf/131&oldid=1111832" இலிருந்து மீள்விக்கப்பட்டது