பக்கம்:வாழும் வழி.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

134

வாழும் வழி


உருவாகிறது என்னும் கருத்தில் வியப்போ - ஐயமோ கொள்ள வேண்டியதில்லையன்றோ?

நிலத்தை உழவில்லையாயின், மேல் மண்ணில் மட்டுமே கதிரொளி படும். போதுமா? பயிர்கள் வேரின் மூலம் மண்ணின் அடிப்பகுதியைத் துளைத்துக்கொண்டு உணவு தேடிச் செல்கின்றனவே. அடியில் கூடுமானவரை நெடுந்தொலைவில் உள்ள மண் பகுதியில் எல்லாம் கதிரொளி படவேண்டுமே. அதற்காகத்தான் உழுவது! கீழிருக்கும் மண்ணை உழுது கிளறி மேலுக்குக் கொண்டுவந்து ஒளிபடச் செய்துகொண்டே யிருக்க வேண்டும். அதனால்தான் உழவர்கள் அடிக்கடி உழுதுவைக்கின்றனர். மேலோடு உழுதால், மேல் மட்டத்திலுள்ள சிறு பகுதி மண் மட்டுந்தான் ஒளி பெறும்; ஆகையால் ஆழ உழவேண்டும். இது குறித்தே இக்கால வல்லுநர்கள், பழைய நாட்டுக் கலப்பை போதாது - எந்திரக் கலப்பை கொண்டு உழ வேண்டும் என்று கூறுகின்றனர்.

இவ்வாறு ஆழ உழுவதனால் மண்ணில் உப்பு ஆற்றல் நன்கு உருவாகும். இந்த உப்பு ஆற்றலைப் பயிர்கள் வேர்களின் வாயிலாக உட்கொள்கின்றன. வேர்களிலுள்ள ஆயிரக்கணக்கான வேர்த் தூய்கள் (Root hairs), மிகவும் நுட்பமானவையான மண் அணுக்களின் இடுக்குகளில் புகுந்துசென்று நில உப்புக் கரைசலை உறிஞ்சிக்கொள்கின்றன. இந்த நில உப்புக் கரைசல் வேரின் மையத்தையடைந்து அங்கிருந்து மேலே ஏறிப் பயனளிக்கிறது. இதற்கு வேர் அமுக்கம் (Root Pressure)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழும்_வழி.pdf/136&oldid=1112380" இலிருந்து மீள்விக்கப்பட்டது