பக்கம்:வாழும் வழி.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் சுந்தர சண்முகனார்

135


என்று பெயராம். பயிர்களுக்கு இந்த வசதியைச் செய்து கொடுப்பதற்காகத்தான் உழுதல் வேலை நடக்கிறது.

இப்பயன் கருதியே, எந்திரக் கலப்பை கொண்டு ஆழ உழ வேண்டும் என்று இக்கால அறிவியலார் வற்புறுத்துகின்றனர். இதே கருத்தை இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ஒரு மாபெருந்தமிழறிஞர் - ஏன் உலக அறிஞர் மிகவும் அழகாக - அதே நேரத்தில் அழுத்தம் திருத்தமாக அறிவித்துள்ளார்? அவர் யார்? அவர் யாராக இருக்க முடியும் - திருவள்ளுவரைத் தவிர! “ஒரு பலம் அளவு மண்ணானது கால்பலம் அளவு மண்ணாக ஆகும்வரை நிலத்தை உழுது உழுது உணக்கினால் (உலர்த்தினால்), பிடி எருவும் வேண்டிய தில்லாமலே நிலம் நிரம்ப விளையும்” என்பதுதான் வள்ளுவனாரின் அறிவுரை. ஆகா என்ன அழகான கருத்து எவ்வளவு அருமையான கண்டுபிடிப்பு! இக்கருத்துக் கருவூலம் அமைந்துள்ள குறள் வருமாறு:

“தொடிப்புழுதி கஃசா உணக்கின் பிடித்தெருவும்
வேண்டாது சாலப் படும்”

(தொடி - ஒரு பலம்; புழுதி - மண், கஃசு- கால் பலம்)

இக்குறள் திருக்குறளில் உழவு என்னும் பகுதியில் உள்ளது. ஒரு பலம் மண் கால் பலம் வீதம் காய வேண்டுமானால், எத்தனை முறை உழ வேண்டும் - எவ்வளவு ஆழமாக உழவேண்டும் என்று புரியுமே! ‘காய்ந்த நாட்டிற்கு கருப்பில்லை’ என்னும் பழமொழியின் கருத்துக்கும் இக்குறளுக்கும் ஏதேனும் தொடர்புண்டோ! பழமொழியின் படி, நிலம் நன்கு காய்வதால் மண் வளம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழும்_வழி.pdf/137&oldid=1112381" இலிருந்து மீள்விக்கப்பட்டது