பக்கம்:வாழும் வழி.pdf/138

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

136 வாழும் வழி
———————————————————————————————————————————————————————————————————

பெற்று விளைச்சல் பெருக்க, நாட்டில் கருப்பு (பஞ்சம்) இருக்காது. மக்களுக்கு வாழ்வு பெருகும்.

நிலத்தில் வாழும் ‘நாங்கூழ்ப் புழு’ என்னும் ஒருவகை மண்புழு, மண்ணைக் கிளறிக் கிளறி மேலும் கீழும் ஆக்குவதால் மண் ஓரளவு வளம் பெறுவதாகச் சொல்லுவது வழக்கம். இதனாலும் - கதிரொளி அடி மண்ணில் படுவதற்கு வாய்ப்பிருக்கின்றதோ? இக்கருத்தை மனோன்மணியம் என்னும் நாடகக் காவியத்தில்,

“ஒகோ நாங்கூழ்ப் புழுவே! உன்பாடு
ஓவாப் பாடே உணர்வேன் உணர்வேன்!
உழுவோர்க் கெல்லாம் விழுமிய வேந்து நீ!
எம்மண் ணாயினும் நன்மண் ணாக்குவை,
விடுத்தனை யிதற்கா எடுத்தஉன் யாக்கை!”

என்று அப் புழுவைப் பார்த்தே கூறுவதுபோல, பேராசியர் சுந்தரம்பிள்ளை பாடி யமைத்திருக்கின்றார். எனவே, விளைச்சல் பெருக ஆழ உழ வேண்டியதின் இன்றியமையாமை புலப்படுமே. இதை வைத்துத்தான், எந்தச் செயலிலுமே நுனிப்புல் மேயாமல், ஆழ ஈடுபட வேண்டும் என்று உலகியலில் பழமொழி கூறுகின்றனரோ?

“அகல உழுவதினும் ஆழ உழு!”

வாழும் வழியறிந்து வையகம் வாழ்க!

★ ★ ★
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழும்_வழி.pdf/138&oldid=1112388" இருந்து மீள்விக்கப்பட்டது