பக்கம்:வாழும் வழி.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

14

வாழும் வழி



வாழ்வு என்றால் சாகும்வரையும் வாழும் இன்ப வாழ்வு என்று பொருள் கொள்ளும் குறுகிய நோக்கம் எனக்கின்று. தம் வாழ்நாளிலே வாழவேண்டிய முறைப் படி வாழ்ந்தவர்கள் தாம் செத்த பின்பும் வாழ்வார்கள். அதுதான் உண்மையான வாழ்வு தன் செல்வ வளத்தை வாரி வழங்கிய பாரி வள்ளல் இன்றும் மக்களிடையே வாழ்கிறான்; புகழப் பெறுகிறான். அறிவு வளத்தை வாரி வழங்கிய வள்ளுவர் போன்றோர் இன்றும் வாழ்கின்றனர்; இனியும் என்றும் வாழ்வர். இதுதான் நீடித்த நிலையான வாழ்வு. இந்தப் புகழ் வாழ்விற்கு என்றும் அழிவேயில்லை. இதனை வள்ளுவர் பின்வரும் குறளில் குறிப்பிட்டுள்ளார்:

ஒன்றா உலகத்து உயர்ந்த புகழல்லால்
பொன்றாது நிற்பது ஒன்றில்”

மக்களாய்ப் பிறந்தோர் வாழும் வழி இதுதானே!


2. விருந்தோம்பல்

விருந்தோம்புதல் மனித உள்ளத்தின் உயர்ந்த பண்பாகும். பிள்ளையில்லா வாழ்வினும், விருந்தினரைப் பெறாத விருந்தோம்பாத குடும்ப வாழ்வு மிகவும் வெறிச்சோடிக் காணப்படும். அமிழ்தமானாலும், விருந்தினை வெளியே விட்டுத் தாம் மட்டும் உண்பது மனிதத் தன்மைக்கு அழகேயன்று. 'மருந்தேயாயினும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழும்_வழி.pdf/16&oldid=1119171" இலிருந்து மீள்விக்கப்பட்டது