உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வாழும் வழி.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

16

வாழும் வழி



கண்ணகியின் கற்புச் செயல்

கற்புக்கு அணிகலமாகிய கண்ணகியை, வாழ்க்கையில் இன்பமின்றித் தவிக்கவிட்டான் கணவன் கோவலன். மாதவியை அடுத்திருந்தான். பின் பிழையுணர்ந்து வீடு திரும்பினான். மனைவியை மதுரைக்கு அழைத்துச் சென்றான். மாதரி வீட்டில் தங்கினான். ஆங்கு உணவுண்ட பின் கண்ணகியை அருகில் அமரச் செய்தான். தன் குற்றங்களையெல்லாம் ஒப்புக்கொண்டு மன்னிப்புக் கேட்பவன் போல் புலம்பத் தொடங்கினான்: “இரவில் கரடுமுரடான வழிகளில் கால் நோவ உடன் வந்த கண்ணகியே! உன் அன்பை என் னென்பேன்! உன் உள்ளம் அறியாமல் வாணாளை வீணாள் ஆக்கினேன். உனக்கு இன்பமே அளித்தே னில்லை. துன்பக் கடலிலேயே தோயச் செய்தேன். அவ்வமயம் உன் மனநிலை எவ்விதம் இருந்ததோ! ஆ கொடியேன், என் செய்தேன்' என்றெல்லாம் பல கூறி அரற்றினான்; பிதற்றினான்; ஏங்கினான்.

கேட்ட கண்ணகி உம்மைப் பிரிந்திருந்த காலத்தில் எனக்கு நல்ல உணவில்லை; உயர்ந்த ஆடை அணிகலன்கள் கிடைக்கவில்லை; உம்மை மணந்து கொண்டதால் துன்பமேயன்றி இன்பம் ஏது என்றெல்லாம் மொழிந்தாள் என்று எண்ணுகிறீர்களா? இல்லையில்லை! “என் அருமைத் தலைவரே! இராவழி நடந்ததால் என்கொன்றும் அலுப்புத் தோன்றவில்லை காரணம் நும்முடன் வந்தமையே! நும்மைப் பிரிந்து தனித்திருந்த காலமே - அதிலும் தனிமைத்துன்பத்தால்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழும்_வழி.pdf/18&oldid=1104113" இலிருந்து மீள்விக்கப்பட்டது