பக்கம்:வாழும் வழி.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் சுந்தர சண்முகனார்

17


இன்பமின்றிக் கழிந்தது. அப்போழ்து பெருங் கவலையொன்று என்னை மிகவும் தாக்கியது. நம் வீட்டிற்கு வந்த அறவோர்கட்கு ஒன்றும் அளித்தேனில்லை; செந்தண்மை பூண்ட அந்தணர்களை மகிழ்வித்தேனில்லை; துறவிகளைக் காத்தேனில்லை; விருந்தினர்களை எதிர்கொண்டு வரவேற்றேனில்லை. பெண்கட்குக் கிடைக்கக்கூடிய இவ் அரும்பெரும் வாய்ப்புக்களையெல்லாம் இழந்ததே எனக்குத் துன்பமாகத் தோன்றியது” என்று அன்பு கனிய இன்மொழி புகன்றாள். என்னே நம் கண்ணகியின் கலங்காத கற்பு நோக்கம்! இதனை,

“அறவோர்க்கு அளித்தலும் அந்தணர் ஓம்பலும்
துறவோர்க்கு எதிர்தலும் தொல்லோர் சிறப்பின்
விருந்தெதிர் கோடலும் இழந்த என்னை"

என இளங்கோவடிகள் இனிமையாகச் சிலப்பதிகாரம் என்னும் நூலில் பொறித்துக் காட்டியுள்ளார்.

சீதையின் சீரிய நோக்கம்

இராமனும் சீதையும் நாட்டை விட்டனர், காட்டையடைந்தனர். அங்கே சீதை இராவணனால் சிறையெடுக்கப்பட்டாள். இலங்கையை அடைந்தாள். இராமன் காட்டில் தனித்து வருந்தினான். இலங்கையில் இருக்கும் சீதையின் கவலைக்கோ ஓர் எல்லையில்லை. அவள் கவலை சென்றது எவ்விதத்தில்? “காட்டில் நாம் இருந்த குடிசைக்குப் பல துறவிகள் விருந்தாக வருவார்களே, அவர்களின் நிலை என்ன? அவர்கட்குச் சமைத்துப் பரிமாறுபவர் யாவர்? அங்கிருந்து அவர்க்குத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழும்_வழி.pdf/19&oldid=1104115" இலிருந்து மீள்விக்கப்பட்டது