உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வாழும் வழி.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

24

வாழும் வழி



இப்போதும் நம் உலகில் ‘உலக ஒன்றுமைக் கழகம்’ (சர்வதேசச் சங்கம்) இருந்து தொண்டாற்றி வருவதை அரசியல் அறிவுபெற்ற அனைவரும் அறிவார்கள். இந்த ஐக்கிய நாடுகளின் நிறுவனம் தமிழில் சுருக்கமாக ஐ.நா. என்று அழைக்கப்படுகிறது.

ஐ.நா.வின் நோக்கங்களுள் முக்கியமானவற்றைக் கீழே சுருக்கித் தருகிறேன்:

1. இனி உலகின் எந்த மூலையிலும் போர் என்ற பேச்சே எழக்கூடாது.
2. ஒவ்வொரு மனிதனின் உரிமையும் மதிப்பும் காப்பாற்ற வேண்டும்.
3. மனித சமுதாயம் துன்பங் காணாத இன்ப வாழ்க்கை வாழ்வதற்கு வேண்டிய வசதிகளை ஆக்கித் தரல் வேண்டும்.
4. மக்களிடையே சகிப்பும், பொறுமையும் நிலவச் செய்து நட்பை வளர்க்கச் செய்யவேண்டும்.
5. உலக ஒற்றுமைக்கும் அமைதிக்கும் கேடு தோன்றின் உலகத்தார் அனைவரும் ஒன்றுபட்டுக் காக்க வேண்டும் - முதலியன.

இவற்றுள் மூன்றாவது நோக்கத்துள் மற்றைய நான்கும் அடங்கிவிடும் ஆதலின், அது மிகவும் இன்றியமையாதது. இந் நிறுவனத்தின் சட்ட திட்டங்களைப் பின்பற்ற ஒத்துக்கொள்ளும் எந்த நாடும் இதில் பங்கு கொண்டு தொண்டாற்றலாம். இது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழும்_வழி.pdf/26&oldid=1104133" இலிருந்து மீள்விக்கப்பட்டது