பக்கம்:வாழும் வழி.pdf/29

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் சுந்தர சண்முகனார்

27


படுவதற்கும் வசதியாக வாழ்வதற்கும் உரிய சட்ட திட்டங்கள் பலப் பல வகுக்கப்பட்டன. பல நாடுகள் கழகத்தில் சேர்ந்தன. சில நாடுகள் சில்லாண்டுகள் கழித்துச் சேர்ந்தன. இக்கழகம் செய்த ஆக்க வேலைகளுள் ஒரு சில கீழே தரப்படும்.

1. சுவீடனுக்கும் - பின்லாந்திற்கும், செர்மனிக்கும் - போலந்துக்கும், கிரேக்கருக்கும் - பல்கேரியருக்கும், கொலம்பியாவிற்கும் - பெருவிற்கும் ஏற்பட்ட சச்சரவுகளைத் தீர்த்துப் போர் மூளாமல் செய்தது.
2. ஏழ்மை நாடுகளின் தொழில் வளத்தைப் பெருக்கிப் பொருளாதாரத்தை உயர்த்த முயன்றது.
3. அடிமைத்தனம் - அபின் வியாபாரம் முதலிய வற்றைத் தொலைக்கப் பாடுபட்டது.
4. தொத்து நோய்கள் பரவாமல் இருக்கத் தடுப்பு முறைகள் செய்தது.
5. ஏழை நாடுககளுக்குப் பெருந்தொகையைக் கடனாக அளித்துதவியது.
6. போர்க் கைதிகள் தத்தம் நாடடையச் செய்தது.
7. நிற வேற்றுமையை ஒழிக்க முனைந்தது.

இப்படிப் பலவகை நன்மைகளைச் செய்து கொண்டிருந்த சங்கம் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்தது என்று நினைக்கிறீர்களா? அதுதான் இல்லை. சிறகிழந்த பறவையாயிற்று! வேலியால் மேயப்பட்ட பயிராயிற்று! எப்படி? குறுகிய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழும்_வழி.pdf/29&oldid=1104152" இருந்து மீள்விக்கப்பட்டது