புலவர் சுந்தர சண்முகனார்
29
முதல் உலகப் போருக்குப் பின் முதல் முதல் இந்த உலக ஒற்றுமைக் கழகத்தை நிறுவப் பாடுபட்டவர்களுள் முக்கியமானவர், இருபத்தெட்டாவது அமெரிக்கச் சனாதிபதியாயிருந்த ‘வுட்ரோ வில்சனே’ (Woodrow Wilson) யாவார். கழகத்துக்குரிய திட்டங்களைத் தயாரித்தவரும் இவரே! இதனாலேயே உலகம் இன்றும் இவரை, ‘சர்வதேசச் சங்கத்தின் தந்தை’ என்று புகழ்கிறது. தந்தை வில்சன் பெற்றெடுத்த ஒற்றுமைக் குழந்தையை வளர்க்கச் செவிலியர் பலர் பல வகையில் பாடுபட்டிருக்கிறார்கள். அவர்களுள் ‘வெல்ஸ்’ என்பவரும் ஒருவர். இவர் தாம் எழுதிய ‘சரித்திரச் சுருக்கம்’ என்ற நூலுள், உலக ஒற்றுமையை நிலை நாட்டுவதற்கு ஒரு பொதுவான கொள்கையே இருக்க வேண்டும்; எல்லோரும் கல்வி பயில வேண்டும்; எவ்வகைப் படையும் இருக்கக்கூடாது; வேலையில்லாத் திண்டாட்டம் ஒழியவேண்டும் - என்றெல்லாம் குறிப்பிட்டுள்ளார். உண்மைதான் ஏட்டில் எழுதி வைத்து என்ன பயன்? எல்லோரும் பின்பற்ற வேண்டுமே ஏட்டுச் சுரைக்காய் கறிக்குதவாதன்றோ?
எல்லா வசதியும் நிறைந்த இந்த நூற்றாண்டில், அதிலும் அரசியல் தலைவர்கள், அதிலும் போரால் நொந்த பின்பு இவ்வுலக ஒற்றுமைப் பேச்சை எழுப்பியதில் என்ன வியப்பு? ஒரு வசதியும் இல்லாதிருந்த காலத்தில், ஏறக்குறைய இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழ்நாட்டில் பிறந்த ஓர் ஏழைத் தமிழ்ப் புலவர், உலக ஒற்றுமை வேண்டும் என்று தம் கவியில் குறிப்பிட்டுள்ளார். ‘யாதானும் நாடாமல்