30
வாழும் வழி
ஊராமால்' என்னும் திருவள்ளுவரின் திருக்குறளை இங்கு நான் எடுத்துக் கூறவில்லை. அவர், யாதும் ஊரே யாதும் நாடே என்று குறிப்பிட்டிருப்பது கற்றவர்களுக்கு மட்டுமே. யான் குறிப்பிடும் புலவர் பொதுவாக உலகத்தார்க்கே சொல்லியுள்ளார். அதனாலேயே அவர் கவிக்குப் ‘பொதுவியல்’ என்னும் பேர் அளிக்கப்பட்டுள்ளது. அது பழைய தமிழிலக்கியமாகிய புறநானூற்றுள் உள்ளது. அதன் கருத்து வருமாறு:
“எல்லா ஊரும் நமக்கு ஒன்றே. எல்லா மனிதரும் நம் உறவினரே. நமக்கு நன்மையோ, தீமையோ வருவது நம்மாலேயே. துன்பம் வந்தபோது நோவதோ, அதைப் போக்கிக் கொள்வதோ நம்மைப் பொறுத்தேயுள்ளன. இறப்பு என்பது நமக்கு மட்டும் வரும் புதுமையன்று. அதனால், வாழ்வு வந்தபோது துள்ளிக் குதிப்பதோ, தாழ்வு வந்தபோது தாங்காது புலம்புவதோ எம்மிடம் இல்லை. ஒரு சிலரை உயர்த்துவதோ, மற்றொரு சிலரைத் தாழ்த்துவதோ எமக்கு வழக்கம் இல்லை.” என்பதாகும். இதனை,
“யாதும் ஊரே யாவரும் கேளிர்
தீதும் நன்றும் பிறர்தர வாரா
நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன
சாதலும் புதுவ தன்றே, வாழ்தல்
இனிதென மகிழ்ந்தன்றும் இலமே முனிவின்
இன்னா தென்றலும் இலமே
.........................
பெரியோரை வியத்தலும் இலமே
சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே.”