பக்கம்:வாழும் வழி.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் சுந்தர சண்முகனார்

31


என்னும் புறநானூற்றுப் (192) பாட்டால் அறியலாம். இக்கருத்துக்களை முக்கியமாக முதல் அடியை உலக மக்கள் பின்பற்றினால் வரும் தீங்கென்ன? உலகம் ஒன்றுபட முடியாதா?

இன்ன இன்ன இடத்தில் இன்னின்ன நாடுகள் இருக்கின்றன என்று அறிய முடியாதபடி, கடலாலும் மலையாலும் உலகம் பிளவுபட்டுக்கிடந்த காலத்திலேயே நம் புலவர், ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்று முழங்கியிருக்கிறார் என்றால், கப்பல், வானவூர்தி, வானொலி, தொலைபேசி, தொலைக்காட்சி முதலிய கருவிகள், காலத்தையும் தூரத்தையும் வென்று சுருக்கி, உலகத்தை இணைத்துக் கொண்டிருக்கின்ற இவ்விருபதாம் நூற்றாண்டிலாவது உலகம் ஒன்றுபடக் கூடாதா? “யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்ற மூல மந்திரத்தினை ஒவ்வொருவரும் பின்பற்றி நடந்தால் ‘ஒரே உலகம்’ உருவாகாதா?

இம் மந்திரத்தை உலகிற்கு வழங்கிய அப்பழைய தமிழ்ப் புலவரின் பெயர் ‘கணியன் பூங்குன்றனார்’ என்பது. இவரை, சர்வதேசச் சங்கத்தின் தந்தை என்று உலக விளம்பரம் பெற்ற அமெரிக்கச் சனாதிபதி வில்சனாக உருவகித்து, தமிழ்நாட்டு வில்சன் என்று அழைத்ததில் என்ன தவறு?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழும்_வழி.pdf/33&oldid=1104164" இலிருந்து மீள்விக்கப்பட்டது