பக்கம்:வாழும் வழி.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

34

வாழும் வழி


தீயை அணைக்காமல் சிறிதளவு எச்சமாய் (குறையாய்) விட்டு வைத்தாலும், அது பெருகி வளர்ந்து பெருங்கேடு செய்யுமல்லவா? அது போன்றதே வினைக்குறையும். இதனை நம் வள்ளுவப் பெருந்தகையாரும்,

“வினை பகை என்றிரண்டின் எச்சம் நினையுங்கால்
தீயெச்சம் போலத் தெறும்”

என்னும் குறட்பாவால் தெளிவுறுத்தியுள்ளாரே! எனவே எந்த வேலையினையும் காலங்கடத்திச் செய்யாதே உரிய காலத்தில் செய்துவிடுக. பொன்னினும் சிறந்ததொரு பொருள் அருங் காலமல்லவா? நினைவிருக்கட்டும்.

உன் அன்புள்ள,
ஆசிரியன்


5. புகழ்ச்சியில் வெறுப்பு

என்ன! புகழ்ச்சியிலே வெறுப்பா? ஆம். அப்படியென்றால் பிறர் புகழ்ச்சியில் வெறுப்போ? இல்லயில்லை. தம் புகழ்ச்சியிலேயே வெறுப்பு. இப்படியுங் கூட உலகத்தில் உண்டா? இது என்ன விந்தையாக இருக்கின்றதே! ஆம் விந்தையாகத்தான் இருக்கும். எவ்விதத்தில்.

உலகில் புகழ்ச்சி விரும்பாதோர் பெரும்பாலும் இருக்கமாட்டார்கள். ஒவ்வொருவரும் தாம் புகழ்ச்சி அடைவதற்காக அரும்பாடுபடுகின்றனர். ஆனால், அப்புகழ்ச்சி நேர்மையான முறையில் கிடைப்பதாக இருந்தாலும் ஒருவாறு ஒத்துக்கொள்ளலாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழும்_வழி.pdf/36&oldid=1119186" இலிருந்து மீள்விக்கப்பட்டது