உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வாழும் வழி.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் சுந்தர சண்முகனார்

35



அப்பப்பா உலகில் புகழ்ச்சிக்காகச் சிலர் செய்யும் கொடுமைகளைப் பொறுக்க முடியவில்லையே! வேறொருவர் செய்த புகழ்ச்சிச் செயல்களைத் தம்முடையன என்று சொல்லிக் கொள்வோர்சிலர். பிறரை வருத்திச் சில காரியங்களை முடித்துக்கொண்டு அதனை வெளியில் மறைத்துப் புகழ்கொள்வோர் சிலர். இப்படி இன்னும் பலர் உளர். மாட்டை அடித்துச் செருப்புத்தானம் செய்வதால் யாது பயன்? கடைத் தேங்காயைத் திருடி வழிப் பிள்ளையாருக்கு உடைக்கலாமா?

இன்னும் சிலருக்கு எழுத்து வாடையே தெரியாது. ஆனால் பையில் எழுதுகோல் சொருகியிருப்பார்; கையில் கடிகையாரம் கட்டியிருப்பார். மற்றும் சிலர், வாடகைக்கு ஆடையணி வாங்கி அணிசெய்து கொள்வர்; கஞ்சிக்கும் வழியிருக்காது; காஃபி சாப்பிடுவது வழக்கம் என்று சொல்லிக்கொள்வர். இவ்விதம் பல பிறவிகள் உண்டு. குடிப்பது கூழ் - கொப்பளிப்பது பன்னீர் போலும்?

இத்தகைய புகழ்ச்சியுலகில் புகழ்ச்சியை வெறுப்பது என்பது எளிதா? மிகவும் அரிய செயல் அல்லவா? ஆனால் அப்புகழ்ச்சியினையும் வெறுத்த வீரர்கள் உலகில் இல்லாமற் போகவில்லை. அப்படியெனின், அவர்களைப் பற்றி அறிந்துகொள்ள ஆவலும் எழுச்சியும் அடைய வேண்டாமா?

பண்டொரு காலம். ஓர் அழகிய காடு. அதன் நடுவில் ஒரு பலாமரம். அதன் அடியில் ஒருவர் அமர்ந்திருந்தார்; அவர் கட்டியிருந்த துணியில் இனி-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழும்_வழி.pdf/37&oldid=1104802" இலிருந்து மீள்விக்கப்பட்டது