பக்கம்:வாழும் வழி.pdf/46

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

44

வாழும் வழி


திருவள்ளுவரின் தெவிட்டாத திருக்குறளன்றோ? “வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு” என்று சுப்பிரமணிய பாரதியார், திருக்குறள் உலகப் பொதுநூல் என்பதற்கு நற்சான்றிதழ் (Certificate) கொடுத்திருப்பதாகக் கூறுவது வழக்கம். இல்லை, இஃது அவரது சொந்தச் சரக்கில்லை. ஒருவேளை அவ்வாறே எடுத்துக்கொண்டாலும், இக்கருத்தை முதலில் வெளியிட்டவர் அவரல்லர். இதனைத் திருவள்ளுகூர் காலத்திலேயே புலவர் பெருமக்கள் பறைசாற்றித் தெரிவித்துவிட்டனர்.

“வள்ளுவர் பாட்டின் வளமுரைக்கின் வாய்முடுக்குந்
தெள்ளமுதின் தீஞ்சுவையும் ஒவ்வாதால்-தெள்ளமுதம்
உண்டறிவார் தேவர் உலகு அடைய உண்ணுமால்
வண்டமிழின் முப்பால் மகிழ்ந்து”

என ஆலங்குடி வங்கனார் அப்போதே அறிவித்துப் போந்தார். ‘உலகு அடைய - உலகம் முழுவதும் உண்ணும்’ என அப்போதே குறி (ஆருடம்) சொல்லிவிட்டுப் போனார். எதிர்காலத்துக்கும் இடம் வைத்து, ‘உண்ணும்’ என்று செய்யும் என்னும் வாய்ப்பாட்டு வினைமுற்றில் கூறிப் போந்தமையின் நுணுக்கத்தினை நோக்கி நுனித்து மகிழ்க.

“வள்ளுவர் உலகங் கொள்ள மொழிந்தார் குறள்”

என நரிவெரூஉத்தலையாரும் கூறியுள்ளார்.

ஆம், உலகின் உட்கொள்கின்றனர்; ஆனால் தமிழர்களின் நிலை என்ன? “வள்ளுவன் குறளை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழும்_வழி.pdf/46&oldid=1104897" இருந்து மீள்விக்கப்பட்டது