பக்கம்:வாழும் வழி.pdf/47

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் சுந்தர சண்முகனார்

45


வையகமெல்லாம் வாரி யிறையடா தமிழா’ என்று பாடுகிறோம், ஆடுகிறோம்; ஆனால் செய்தோமா? செய்கின்றோமா? போகட்டும், இனியேனும் செய்வோமா?

தமிழர்கள் திருக்குறளை மறந்தது உண்மைதான். அதனை அனைத்துலகிற்கும் அறிமுகப்படுத்த அவர்கள் மறந்தது உண்மைதான். ஆனால், திருக்குறள் தமிழர்களை மறக்கவில்லை. அவர்களை அனைத்துலகிற்கும் அறிமுகஞ் செய்து வைக்க அது மறக்கவில்லை. தன் கருத்தின் திண்மையால் உலக மக்களைக் கவர்ந்ததன் வாயிலாக, திருக்குறள் என ஒரு நூலுண்டு, அஃது எழுதப்பட்டது தமிழ்மொழியில், அம்மொழியினைப் பேசுபவர் தமிழர்கள், அவர்கள் அத்தகையதொரு நூலை உலகிற்கு அளிக்கவல்ல ஆற்றலும் அநுபவமும் நிரம்பியவர்கள்’ என அனைத்துலகினரும் அறிந்து வியக்கச் செய்தது நம் அருமைத் திருக்குறளன்றோ?

‘உலகிற்கு அறிமுகஞ் செய்து பரப்புவது அப்புறம் இருக்கட்டும், முதலில் நீங்கள் படியுங்கள்!’ என்று திருக்குறள் சொல்லுவதுபோல் - திருவள்ளுவர் சொல்வதுபோல் தோன்றவில்லையா?

திருக்குறளை ஒரு முறை படித்தால் போதுமா? இரு முறை படித்தால் போதுமா? ஒரு கருத்துரையைக் கற்றால் போதுமா? ஒரு குறிப்புரையைக் கற்றால் போதுமா? திருக்குறளோ ஒரு வாழ்க்கை நூல் வாழ்க்கைத் துணை நூல். இன்னும் சில்லாண்டுகள் சென்ற பின்னர் - சில அநுபவங்களைப் பெற்றபின்னர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழும்_வழி.pdf/47&oldid=1104898" இருந்து மீள்விக்கப்பட்டது