உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வாழும் வழி.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

46

வாழும் வழி


திருக்குறளை மீண்டும் ஒரு முறை படித்துப் பார்த்தால் தெரியும். புது அழகு புது நயம் புதுப்பொலிவு காணப்படும். இவ்வாறே ஆண்டுக்கு ஆண்டு, அநுபவத்துக்கு அநுபவம் திருக்குறள் தெவிட்டாது இனிக்கும். ‘உள்ளுதொறு உள்ளுதொறு உள்ளம் உருக்குமே வள்ளுவர் வாய்மொழி’ என மாங்குடி மருதனாரும், ‘முப்பால் ஆய்தொறும் ஊறும் அறிவு’ என உருத்திரசன்ம கண்ணரும் உரைத்திருப்பதை இப்போது ஒரு முறை ஊன்றி நோக்குக.


7. திருக்குறளின்
அமைப்பு முறை ஆராய்ச்சி

அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால் என்ற வரிசையில் இப்பொழுது காணப்படும் திருக்குறளின் அமைப்பு முறையில் மாறுதல் செய்ய இடமிருக்கிறது. இம்மூன்று பால்களையும் தன்னகத்துக் கொண்டிருப்பது காரணமாகத் திருக்குறள் பெற்றிருப்பதாக நாம் எண்ணிக்கொண்டிருக்கும் முப்பால் என்னும் பெயரையே ஆட்டங் காணும்படிச் செய்யத் தெம்பு இருக்கிறது.

காதில் விழுகிறது; சிறு சலசலப்பு அன்று; பெருங் கூக்குரல்கள் - அறைகூவல்கள் காதைத் துளைக்கின்றன. “பழைய சங்கப் புலவர்களே ‘முப்பால்’ என்று திருவள்ளுவமாலையில் குறிப்பிட்டிருக்கின்றனரே. அறம் பொருள் இன்பம் வீடு என்னும் வரிசையில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழும்_வழி.pdf/48&oldid=1119188" இலிருந்து மீள்விக்கப்பட்டது